த.தே.கூட்டமைப்பிடமிருந்து எதனையும் வாங்க கூடாது: கிளிநொச்சியில் இராணுவத்தினர் உத்தரவு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் இருந்து எதனையும் வாங்க கூடாது என கிளிநொச்சியில் இராணுவத்தினர் உத்தரவு போட்டிருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கனாகாம்பிகை குளம் பகுதி ஒன்றில் உள்ள முன்பள்ளி மாணவர்களுக்கு புத்தக பை மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்குவதற்கு ஏற்பாடு சேர்த்து மறுநாள் தானும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் அவற்றை வழங்க சென்றதாகவும்,
கடமையாற்றும் சிவில் பாதுகாப்பு அமைப்பின் ஆசிரியர்கள் இன்று மாணவர்கள் யாரும் வரவில்லை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வழங்கும் எந்த பொருளையோ, உதவியையோ வாங்க வேண்டாம் என இராணுவத்தினர் கூறியுள்ளதாக தங்களை திருப்பி அனுப்பியதாகவும் கூறினார்.
அத்தோடு, முன்பள்ளி மாணவர்களுக்கென சீருடை தைப்பதற்காக 400 ரூபாவினை வாங்கி அதில் இராணுவத்தினரின் சின்னம் பொறிக்கப்பட்ட சீருடை வழங்கி உள்ளதாகவும்,
முன்பள்ளியில் அல்லது கல்வி சம்பந்தப்பட்ட விடயங்களில் பாதுகாப்பு தரப்பு பணிபுரிய அனுமதிக்கப்படக்கூடாது, அனுமதித்தால் இதுதான் நிலைமை எனவும் கிளிநொச்சியில் வசிக்கின்ற எமது பிள்ளைகளுக்கு நாம் எதனையும் வழங்க முடியாத நிலையில் உள்ளதாகவும்,
யார் மறித்தாலும் என்ன நடந்தாலும் அந்த எமது பிள்ளைகளுக்கு நான் அந்த பொருட்களை வழங்கியே தீருவேன் என இன்று கிளிநொச்சி பிரதேச சபையில் நடைபெற்ற விடுதலை புலிகளில் இருந்து வீரச்சாவடைந்த ஞனசுதன் எனப்படும்,
கந்தசாமி கணேசலிங்கத்தின் 8ம் ஆண்டு நினைவை ஒட்டி 50 மாணவர்களிற்கு புத்தகப் பை மற்றும் வலியின் வரிகள் இறுவட்டின் சிறப்புப் பிரதியும் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே தெரிவித்தார்.
இந்நிகழ்வு இன்று 3.30 மணியளவில் கிளிநொச்சி பிரதேச சபையின் பொது மண்டபத்தில் ஆரம்பமானது.
இந்நிகழ்விற்கு வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வட மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அபிமானிகள் மாணவர்கள், மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila