கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனவரிற்கும் தலா இரண்டு கோடி ரூபா இலஞ்சம் வழங்கியதாக சக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்; குற்றம் சாட்டியுள்ளார் .
எனினும் அத்தொகையானது வரவு செலவுத் திட்ட விசேட ஒதுக்கீடாக அனுமதிக்கப்பட்டு மாவட்டச் செயலகம் ஊடாகவே இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வருடாந்த ஒதுக்கீட்டிற்கு மேலதிகமாகவே இது ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக அந்த நிதியை பயன்படுத்துவது தவறாக எதிர்தரப்பு பிரச்சாரம் செய்வதாக கூட்டமைப்பு சொல்கின்றது.
ஆனால், முக்கிய அன்றாட பிரச்சினைகள் பற்றி பேரம் பேசக்கூடிய இன்னுமொரு மிகப்பெரிய சந்தர்ப்பத்தை, வெறும் இரண்டு கோடிக்காக மறைத்தது மிகப்பெரிய பிழை .அந்த இரண்டு கோடி, வெறுமனே அந்த பாராளுமன்ற உறுப்பினரின் செல்வாக்குக்கு மட்டுமே பயன்படும்.அதிலும் ஒரு கோடியை தரகாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசூலித்து விடுவரென்கின்றனர் அவதானிகள்.
இதனிடையே நான் வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்காததால் என்னைத் தவிர, அதனை ஆதரித்து கை உயர்த்திய ஏனைய 15 பேருக்கும் தலா 2 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது. இதை எவரேனும் மறுப்பார்களா என பகிரங்க சவால் விடுக்கின்றேனென சிவசக்தி ஆனந்தன் சவால் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.