யுத்தம் இடம்பெற்ற காலத்தில் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் பாரியளவில் உதவிகளை வழங்கின. 2005ம் ஆண்டின் பின்னர் கடந்த அரசாங்கம் புலிகளை இல்லாதொழிக்கும் நோக்கில் கிழக்கில் நடவடிக்கைகளை ஆரம்பித்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என கடந்த மஹிந்த அரசாங்கம் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு வாக்குறுதி அளித்திருக்கக் கூடாது எனவும், அந்த பிழையை தற்போதைய அரசாங்கம் சரி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அரசாங்கம் இராணுவத்திற்கு எதிராக செயற்படாது என்ற போதிலும் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம், ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சம்பவம் போன்றன குறித்து விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். |
புலிகளுக்கு எதிரான போருக்கு அமெரிக்காவும், இந்தியாவும் புலனாய்வு உதவிகளை வழங்கின! - நாடாளுமன்றத்தில் ரணில் தகவல்
Related Post:
Add Comments