கிளிநொச்சி வனவளத்திணைக்களம் சிங்கள அலுவலா்களால் நிரப்படுகின்றமையினால் தங்களால் முழுமையான சேவையினை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனா். இன்றையதினம் வியாழக்கிழமையும் கிளிநொச்சி வனவளத்திணைக்களத்திற்கு 13 வெளிக்கள அலுவலா்கள் நியமிக்கபட்டிருந்தனா் அவா்களில் கிளிநொச்சி விவேகானந்தநகரைச் சோ்ந்த ஒரு பெண் அலுவலரை தவிர ஏனைய 12 பேரும் சிங்களம் மட்டும் தெரிந்த வெளிக்கள உத்தியோகத்தா்கள்.
நூறு வீதம் தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் வாழ்கின்ற கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வனவளத்திணைக்களத்தில் ஒரு சில தமிழ் உத்தியோகத்தா்களை தவிர அனைவரும் சிங்கள அலுவலா்களாக காணப்படுகின்றனா். இந்த நிலைமை மக்கள் தங்குதடையின்றி சேவையினை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் குறித்த அலுவலகத்திற்கு தமிழ் உத்தியோகத்தா்களை நியமிக்குமாறு பல சந்தா்ப்பங்களிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் அந்த கோரிக்கைகள் புறம்தள்ளப்பட்டு தற்போதும் சிங்கள மொழி மட்டுமே தெரிந்த வெளிக்கள உத்தியோகத்தா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.