கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 2005ஆம் ஆண்டில் இருந்து சாப்பிட்டதையும், பருகியதை பற்றியும் கேட்கின்றனர். இன்னும் ஒரு வருடம் அவர்கள் இது குறித்து தேட வேண்டியேற்படும்.எனத் தெரிவித்தார். வெளியில் அரசாங்கத்தை விமர்சிக்கும் நீங்கள் நாடாளுமன்றத்தில் ஏன் விமர்சிப்பதில்லை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், அவசியமான நேரத்தில் கதைப்பேன் என்றார். எனினும் போராட்டத்தை முன்னெடுக்க புதியவர்கள் நாடாளுமன்றத்தில் உள்ளனர். நான் அவர்களுக்கு இடமளித்துள்ளேன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து என்னை விரட்ட சிலர் திட்டமிட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான கொள்கை பண்டாரநாயக்கவின் கொள்கை. அனுர பண்டாரநாயக்க கூட கட்சியில் இருந்து வெளியேறிய போதும் நான் அந்த கொள்கையின் அடிப்படையில் செயற்பட்டேன். எனினும் கலப்படமாகி போனவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டு எமது கட்சியை எதிரியாக அடையாளப்படுத்துகின்றனர். நிலைமை இவ்விதமாக சென்றால், எதிர்க்கட்சியின் பணியை நிறைவேற்ற புதிய கட்சி ஒன்று உருவாகும். தற்போதைய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஒன்றில்லை. எதிர்க்கட்சித் தலைவர் கூட இந்த அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்த உதவியவர். எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவியை வகிக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் கூட அரசாங்கத்தை பதவிக்கு கொண்டு வர உதவியதுடன் தேவையான நேரத்தில் அரசாங்கத்தை பாதுகாக்கும் நபர் எனவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். |
வீட்டில் சட்டி, முட்டிகளை எண்ணுகிறாராம் மகிந்த!
Add Comments