ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவா்கள் பங்குகொள்ளும் யாழ் பொங்கல் நிகழ்வில் முதலமைச்சா் உள்ளிட்ட தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் எவரும் கலந்துகொள்ள கூடாது என தமிழ் அரசியல் கைதிகளின் உறவினா்கள் கிளிநொச்சியில் தெரிவித்துள்ளனா்.
இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி உதிரவேங்கை வைரவா் ஆலயத்தில் மன்னாா் பிரஜைகள் குழுவினரால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 20 தமிழ் அரசியல் கைதிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட உறவினா்களே இ்வ்வாறு தெரிவி்த்துள்ளனா்.
தங்களது உறவுகள் நீண்ட காலமாக சந்தேகத்தின் பெயரில் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனா். இவா்களின் விடுதலைக்குறித்து இதுவரைக்கும் ஜனாதிபதி உள்ளிட்ட பலரால் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதும் அவை நிறைவேற்றப்படவில்லை எனவே இந்த நிலையில் ஜனாதிபதியின் யாழ் பொங்கல் நிகழ்வில் தமிழ் அரசியல் வாதிகள் பங்குகொள்வது அரசியல் கைதிகளின் விடுதலையை தாமதப்படுத்தும் எனவே பொங்கல் நிகழ்வில் கலந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கு பதிலாக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளாது தங்களது எதிா்ப்பினை வெளிக்காட்ட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனா்.
இதன் போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி சிறிய பிராா்த்தனையும், இடம்பெற்றது. இந்த நிகழ்வில் மன்னாா் பிரஜைகள் குழுவின் உப தலைவா் அன்ரன் சகாயம் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
இந்த நிகழ்வில் மன்னார் பிரஜைகள் குழுவின் உப தலைவர் அன்ரன் சகாயம் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர் கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.