கீரைக் கடைக்கும் எதிர்க்கடை தேவை என்பது நம் முன்னோர்களின் முடிவு. இந்தக் கருத்துக்குள் ஆழமான பொருளியல் சிந் தனை இருப்பதை நாம் கண்டு கொள்ளலாம்.
சந்தையமைப்பில் கேள்வி நிரம்பல்களே பொருட்களின் விலைகளை தீர்மானிக்கின்ற பிரதான காரணியாகும்.
வேறு சில காரணிகளும் பொருட்களின் விலைகளைத் தீர்மானிக்கின்றனவாயினும் அவை எத்தகைய சந்தைமுறைக்குட்பட்ட பொருட் கள் என்பதைப் பொறுத்து விலை நிர்ணயித் தல் அவற்றின் வகிபாகம் அமையும்.
உதாரணத்துக்கு தனியுரிமைச் சந்தையில் உற்பத்தியாளர் தீர்மானிப்பதே விலை என்றாகி விடுகிறது.
ஆக, தனியுரிமை அல்லது ஏகபோக உரிமை கொண்ட பொருட்களில் நுகர்வோர் வாய் பொத்தி நின்று நிர்ணயித்த விலையில் பொரு ளைக் கொள்வனவு செய்வதைத் தவிர வேறு வழி இல்லை என்றாகி விடுகின்றது.
ஆதலால் தனியுரிமை என்ற சந்தை அமைப்பு விரும்பத்தக்கதன்று.
இங்கு நுகர்வோரின் நலன் கருத்திற் கொள் ளப்படாமல் தனித்து உற்பத்தியாளரின் உச்ச இலாபமே முதன்மை பெறுகின்றது. அத்துடன் தரமற்ற பொருட்களின் உற்பத்தியும் நடந்தேறு கின்றது.
இத்தகைய கேடுகளால்தான் போட்டிச் சந்தை இருக்க வேண்டும் என்ற கொள்கை முன்னெழுகின்றது.
போட்டிச் சந்தை இருக்குமாயின் அங்கு கேள்வி நிரம்பல் என்பவற்றினால் விலை தீர் மானிக்கப்படுவதுடன் குறைந்த விலையில் தர மான பொருள் கிடைப்பதும் உறுதி செய்யப்படும்.
இவ்வாறு கடும் போட்டியுள்ள சந்தைய மைப்பு விலைக்குறைவையும் தரமான பொரு ளையும் பொதுமக்களுக்கு தருவதுபோல, ஏனைய விடயங்களிலும் கடும் போட்டி இருக்கு மிடத்து அங்கு தீர்மானங்கள், கொள்கைகள்; நிதானமாக, நியாயமாக, நீதியாக எடுக்கப்படும்.
குறிப்பாக அரசியல் புலத்தில் பலமான அரசி யல் கட்சிகள் பலமான போட்டியுடன் இருக் கும்போது அந்த அரசியல் கட்சிகளின் கொள் கைகளும் தீர்மானங்களும் நிதானமாக மக் கள் நலன்சார்ந்ததாக அமையும் என்பது உறுதி. இதற்கு ஏகப்பட்ட உதாரணங்களைக் கூற முடியும்.
இலங்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - ஐக்கிய தேசியக் கட்சி, இந்தியாவில் பாரதிய ஜனதா - காங்கிரஸ், தமிழகத்தில் திமுக - அதி முக, அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி - குடி யரசுக்கட்சி, பிரித்தானியாவில் கன்செர்வேடிவ் கட்சி - லிபரல் என இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் பலமான மக்கள் ஆதரவுடன் செயற் படுவதால் அங்கு ஊழல்களும் ஏதேச்சதிகாரங் களும் சுயநலங்களும் மிக மிகக் குறைவு எனலாம்.
மாறாக எங்கள் தமிழ் மண்ணில் இத்த கையதோர் சூழ்நிலை இல்லாமல் போனதன் காரணமாக தன்னிச்சையான தீர்மானங்கள், மக்கள் நலன் பற்றிச் சிந்திக்காத செயற்பாடு கள், அதிகாரத் திமிர்த்தனங்கள், ஜனநாயக மீறல்கள் என ஏகப்பட்ட குழப்பங்கள் மலிந்து போயுள்ளன.
எனவே இத்தகைய தனியுரிமைத் தன் மையை உடைத்து பலமான - இரு பிரதான அர சியல் கட்சி கொண்ட ஓர் அரசியல் கலாசார த்தை உருவாக்குவது தமிழ் மக்களின் தலை யாய கடமையாகும்.
இதனை அமுலாக்கும்போது சர்வாதிகாரப் போக்குகள் சிதைந்து ஜனநாயக பண்புகள் மேலெழும்.
அவ்வாறான சூழ்நிலையில் தமிழ் மக்க ளின் கருத்து என்ன என்ற விடயம் அதிகூடுத லாக கவனத்தில் எடுக்கப்பட எல்லாம் சரியாக அமையும்.