இடைக்கால அறிக்கை தொடர்பில் சுமந்திரனுடன் விவாதத்துக்கு தயார் சவாலை ஏற்றார் சட்டத்தரணி சுகாஸ்


இடைக்கால அறிக்கையில் ஒன் றும் இல்லை என கூறுபவர்கள் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனா திபதி சட்டத்தரணியுமான சுமந்தி ரன் விடுத்த சவாலை ஏற்றுக் கொண்டுள்ள சட்டத்தரணி கன கரட்ணம் சுகாஸ், சுமந்திரன் விவாதத்திற் கான திகதியையும் இடத்தையும் அறிவிக்கு மாறு பதில் சவால் விடுத்துள்ளார். மேலும் கோப் குழு விசாரணைகளில் சுமந்திரன் ஆஜராகி வருவதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று மதியம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்து ள்ளார். அண்மைக்காலமாக பலத்த விவா தங்களுக்கு உட்பட்டிருக்கும் விடயம் கோப் குழுவில் இடம்பெற்றிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட் டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தற்போ தைய விசாரணைகளிலும் ஆஜராகி வருகி ன்றார். இது உண்மையிலேயே நலன்களு க்கு இடையிலான முரண்பாடாக காணப் படுகின்றது. 

இது ஐக்கிய தேசிய கட்சியை காப்பாற்றும் செயற்பாடாகதான் காணப்படுகின்றது.  தமி ழ்த் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய கட் சியை காப்பாற்றும் முகவராகவே செயற்படு கின்றது. மாறாக எங்கள் தாய்மார்கள் தமது பிள்ளைகளை தேடி கொண்டுள்ளார்கள், அரசியல் கைதிகள் விடுதலைக்காக ஏங்கி கொண்டுள்ளார்கள். உங்களுக்கு வழக்குக ளுக்கு ஆஜராக வேண்டும் என்றால், எங்க ளுக்காக போராடியவர்களுக்கு ஆஜராகுங் கள். அதனை விடுத்து ஐக்கிய தேசிய கட் சியை காப்பாற்றுவதற்காக ஆஜராகுவதை கண்டிக்கின்றோம். 

மேலும் எமது மாவீரர் நினைவு தினங் களை குழப்புவதற்கு யாழில் திட்டமிட்டு குற்ற செயல்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மக்கள் இவற்றுக்கு அஞ்சாமல் ஒன்று திரண்டு எங் கள் மாவீரர்களை நினைவுகூர முன்வர வேண்டும். அடுத்து தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை தேசிய கொடியை தமது தேசிய கொடியாக அவர்கள் கருத போவதில்லை. கடந்த 2011 ஆம் ஆண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பி னர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியும் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரி வித்திருந்தார்.
அப்போது அந்த விடயம் பெரிதுபடுத்த ப்படவில்லை. ஆனால் தற்போது வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ் வரன், தேசியக் கொடி ஏற்றுவதை நிராகரித் தது மாத்திரம் பெரிதுபடுத்தப்படுகின்றது. இத ற்கு அவர் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மாற்று அணியாக உருவாகியுள்ளமை காரணமாக இருக்கலாம். 
மற்றும் பிரதானமான விடயமாக புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை யில் ஒன்றும் இல்லை என கூறுபவர்கள் பகி ரங்க விவாதத்திற்கு தயாரா என சிரேஷ்ட சட்டத்தரணி சுமந்திரன் சவால் ஒன்றை விடுத்திருந்தார். நான் சுமந்திரனை இர ண்டு கண்ணோட்டங்களில் பார்க்கின்றேன். அவர் ஒரு சிறந்த சட்டத்தரணி. ஆனால் படு மோசமான தமிழ்த் தேசிய அரசியல்வாதி. அவருடைய சவாலை நாங்கள் ஏற்றுக் கொள்ள தயாராகவுள்ளோம். 

அவருடைய சவாலை ஏற்றுக்கொண்டு ள்ள நாம், அவருடன் விவாதத்தில் ஈடுபடுவ தற்கு இரண்டு நிபந்தனைகளை விதிக்கின் றோம். ஒன்று அவர் விசேட அதிரடிப்படை யுடன் வர கூடாது. அடுத்து விவாதம் பொது அரங்கில் ஊடகங்கள் முன்னிலையில் நடைபெற வேண்டும். எங்கள் தாயகம், சுயநிர்ணயம், தேசியம் நிராகரிக்கப்பட்டுள் ளது. ஆகவே நாங்கள் விவாதத்திற்கு தயார், சுமந்திரன் திகதியை கூறட்டும். இந்த சவால் மட்டுமல்ல, எந்த சவாலையும் நாங்கள் ஏற் றுக்கொள்ள தயார் என சுகாஸ் கூறினார். 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila