காட்டூன் – நன்றி பொங்குதமிழ்
விக்னேஸ்வரன் தன்னையும் வைத்துக்கொண்டு என்ன பேசுவார் என்பதை ரணில் முன்கூட்டியே ஊகித்திருக்கமுடியும். ஏனெனில் ஏற்கனவே இதுபோன்ற கூட்டங்களில் குறிப்பாக வெளிநாட்டுப் பிரதானிகளும் அமர்ந்திருக்கும் மேடையில் விக்னேஸ்வரன் ஆற்றிய உரைகளுக்கூடாக அதை ஊகித்திருக்க முடியும். எனவே பொங்கல் விழாவில் என்ன பேசவேண்டும் என்பதை ரணில் நன்கு யோசித்து தயாரித்துக்கொண்டு வந்திருப்பார். குறிப்பாக பிரிட்டிஸ் பிரதானியும் பிரசன்னமாயிருக்கும் போது அந்த மேடையில் வைத்து அவர் விக்னேஸ்வரனும் உட்பட தமிழ்ச்சமூகத்திற்கும், அனைத்துலக சமூகத்திற்கும் சில செய்திகளை உணர்த்தும் விதத்தில் பேசியிருக்கிறார் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். ஈழத்தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரம் ஒன்றில் வைத்து ஒரு முக்கிய விழாமேடையில் அவர் அப்படிச் சில செய்திகளை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அவர் பலவற்றைப் பற்றியும் பேசியிருக்கிறார். அரசியல் கைதிகள், உயர்பாதுகாப்பு வலையங்கள், மீளக்குடியேற்றம், பயங்கரவாதத்தடைச்சட்டம், இந்திய மீனவர்கள் விவகாரம் போன்றவற்றைப்பற்றியெல்லாம் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடுகளை அறிவிப்பதாக அவரது பேச்சு அமைந்திருந்தது. அவைபற்றி ஏற்கனவே செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து விட்டன. இதில் இரண்டு விடயங்களைப் பற்றி அவர் தெரிவித்திருந்த கருத்துக்கள் உற்றுக்கவனிக்கப்படவேண்டியவை. ஒன்று காணாமல் போனவர்கள் பற்றியது, மற்றது படைமயநீக்கம் பற்றியது.
காணாமல் போனவர்களில் பலர் இப்பொழுது உயிருடன் இல்லை என்று ரணில் கூறியுள்ளார். இது காணாமல் போனவர்களைத் தேடிக்கொண்டிருக்கும் உறவினர்களுக்கும், பொதுநிறுவனங்களுக்கும் அதிர்ச்சியூட்டும் துக்கச் செய்தி. ஆனால் அதன்மூலம் ரணில் ஏதோ ஒன்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்படுகிறார். அது என்ன?
காணாமல் போனவர்களைத் தேடும் உறவினர்களும், பொதுநிறுவனங்களும் செயற்பாட்டாளர்களும் அவர்கள் இலங்கைத்தீவில் எங்கோ ஒரு ரகசிய முகாமில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்புகிறார்கள். சில அனைத்துலக மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் அண்மையில் அவ்வாறு குற்றஞ்சாட்டியிருந்தார்கள். இவர்களோடு தமிழ் அரசியல்வாதிகளும் அப்படிக் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். எனவே அவ்வாறான ரகசிய முகாம்கள் எவையும் கிடையாது என்று ரணில் மறைமுகமாகக் கூறுகிறார்.
ஆனால் அவர் நினைப்பதுபோல அது ஒரு முற்றுப்புள்ளியாக அமையப்போவதில்லை. ஏனெனில் காணாமல் போனவர்கள் மூன்று வகைப்படுவர். முதலாவது யார் பிடித்தது எ;னறு தெரியாமலேயே காணாமல்போனவர்கள். இரண்டாவது யார் பிடித்தது என்று தெரியும். மூன்றாவது சரணடைந்து காணாமல் போனவர்கள். இதில் முதல் வகையினரின் உறவினர்கள் ரணிலுடைய பேச்சுடன் தமது தேடுதலை நிறுத்தக்கூடும். அவர்களை யார் காணாமல் ஆக்கியது என்று கேட்டு சட்டநடவடிக்கைகளை எடுப்பதும் கடினமாயிருக்கும். ஆனால் ஏனைய இரு வகையினருடைய உறவினர்கள் சட்ட நடவடிக்கைகளுக்குப் போகக்கூடும். ஏனெனில் இந்தவகைக் காணாமல்போனவர்களை யார் பிடித்தது? எப்பொழுது எங்கு பிடித்தது? என்ற விபரங்கள் ஓரளவுக்குத் தெரிந்திருக்கும். சரணடைந்தவர்களின் விடயத்திலும் எங்கே எப்பொழுது சரணடைந்தது போன்ற விபரங்களைக் கூறும் போது அதில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரிக்கும். உயிருடன் பிடிபட்டவர்கள், அல்லது சரணடைந்தவரகள்; பின்னர் எப்படி காணாமல் ஆக்கப்பட்டனர் என்று கேட்டு சம்பந்தப்பட்டவர்களின் மீது உறவினர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடும். எனவே ரகசிய முகாம்கள் பற்றிய கேள்விகளுக்கு ரணில் ஓரளவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்பட்டாலும், அதன் அடுத்தகட்டமாக காணாமல்போனவர்களை கொன்றவர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கத்துணியும் உறவினர்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது இது முதலாவது.
இரண்டாவது செய்தி, படைநீக்கம் பற்றியது. ரணில் கூறுகிறார்….. “சிறீலங்காவின் சட்டங்களுக்கு உட்பட்ட வகையிலேயே யாழ்ப்பாணத்தில் படையினர் இருக்கிறார்கள். 2002ஆம் ஆண்டு கைச்சாத்தான போர்நிறுத்த உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கையின் நிலம், கடல், வானம் ஆகிய மூன்று பகுதிகளையும் பாதுகாப்பதற்குரிய உரிமையும் கடமையும் படையினருக்கு உண்டு என்பது ஏற்றுக்கௌ;ளப்பட்டுள்ளது. புலிகள் கூட இதை ஏற்றுக்கொண்டிருந்தார்கள்”; என்று. மெய்யாகவே அவ்வாறு 2002ஆம் ஆண்டு போர்நிறுத்த உடன்படிக்கையில் ஏதும் கூறப்பட்டுள்ளதா?
அவ்வுடன்படிக்கையின் 1.3 என்ற பகுதியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது…….1.3 வுhந ளுசi டுயமெயn யசஅநன கழசஉநள ளாயடட உழவெiரெந வழ pநசகழசஅ வாநசை டநபவைiஅயவந வயளம ழக ளயகநபரயசனiபெ வாந ளழஎநசநபைவெல யனெ வநசசவைழசயைட iவெநபசவைல ழக ளுசi டுயமெய றiவாழரவ நபெயபiபெ in ழககநளெiஎந ழிநசயவழைளெ யபயiளெவ வாந டுவுவுநு…….“அதாவது புலிகள் இயக்கத்துடன் ஆயுத மோதல்களில் ஈடுபடாமலுக்கு இலங்கைத்தீவின் ஆயுதப்டைகள் இலங்கைத்தீவின் இறையாண்மையையும், ஐக்கியத்தையும் பாதுகாப்பதற்குரிய சட்டப்படி குறித்தொதுக்கப்பட்ட தமது பணியை செய்வதைத் தொடரலாம்”;…….. என்று பொருள். ரணில் மேற்படி பகுதியைத்தான் அவ்வாறு வியாக்கியானப்படுத்துகிறார் என்று தெரிகிறது. ஆனால் அந்த உடன்படிக்கை செய்யப்பட்ட போது புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் ஒரு நிலப்பகுதியும், கடலும் இருந்தன. அந்தக் களயதார்த்தத்தை உள்வாங்கியே மேற்படி உடன்படிக்கை செய்யப்பட்டது. அதில் புலிகள் இயக்கம் ஒரு தரப்பாகக் கையெழுத்திட்டது. அதாவது இலங்கைத்தீவில் இரண்டு அதிகார மையங்களும், இரண்டு ஆள்புல எல்லைகளும் உண்டு என்பதை அந்த உடன்படிக்கை ஏற்றுக்கொண்டது. அந்த இயக்கம் பலமாக இருந்தபோது மேற்படி வியாக்கியானம் வரவில்லை. ஆனால் இப்பொழுது அதில் கையெழுத்திட்ட ஒரு தலைவர் அதை தனக்கு வசதியாக வியாக்கியானப்படுத்துகிறார்.
இதுவரை எழுதப்பட்ட உடன்படிக்கைகள் மற்றும் யாப்புக்களில் இவ்வாறு தேவைக்கேற்ப பொருள் கூறத்தக்கவிதத்தில் வாக்கியங்களைச் சேர்ப்பதில் சிங்களத்தலைவர்கள் மிகவும் தந்திரமாக நடந்துகொள்வதுண்டு என்று தமிழர்கள் குற்றம் சாட்டிவருகிறார்கள். இப்பொழுது 2002 உடன்படிக்கையில் கையெழுத்திட்ட ஒரு தலைவரே அதை தனக்கு வசதியாக வியாக்கியானம் செய்யப்பார்க்கிறார். உடன்படிக்கை செய்யப்பட்ட காலகட்டத்தில் அதை எப்படி வியாக்கியானம் செய்திருந்தாலும் அப்பொழுது புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் எனப்படுவது ஒரு பௌதீக யதார்த்தமாகக் காணப்பட்டது. ஆனால் 2009 மேக்குப் பின் நிலைமை அவ்வாறல்ல.
இப்பொழுது ரணில் முப்படைகளுக்குமுள்ள சட்டப்படியான உரிமை பற்றி சுட்டிக்காட்டுகிறார். சிறீலங்காவின் ஆள்புல எல்லைகளைப் பாதுகாப்பதற்கு படையினருக்குச் சட்டப்படியான உரிமை உண்டு என்று அழுத்திக் கூறுகிறார். அதாவது ஒரே நாடு ஒரே தேசம். இதில் சட்டப்படியான பாதுகாப்புக்காரணங்களுக்காக படையினர் வடக்குக்கிழக்கில் தொடர்ந்தும் நிலைகொண்டிருப்பர். எனவே, தமிழர்கள் படைநீக்கத்தைக் கோர முடியாது. மேலும் அவர் தனது பேச்சில் இதோடு தொடர்புடைய மற்றொரு விடயத்தையும் குறிப்பிட்டுள்ளார். இந்திய மீனவர்களின் அத்துமீறல் உள்ளவரை கடற்படையில் குறைப்புச்செய்ய முடியாது என்று. எனவே படைத்தரப்புத் தொடர்பாக அவர் தெரிவித்துள்ள தகவல்களைத் தொகுத்துப் பார்த்தால் ஒரு செய்தி தெளிவாகக் கிடைக்கிறது. தமிழர்கள் கோரி நிற்கும் படை நீக்கத்திற்கு இடமில்லை. படைக்குறைப்புத்தான் சாத்தியம். அதுவும் படிப்படியாகத்தான் செய்யப்படும்.
இப்படிப் பார்த்தால் படைக்குறைப்பின் அளவைப் பொறுத்தே உயர் பாதுகாப்பு வலையங்களின் குறைப்பும் அமையும். உயர் பாதுகாப்பு வலையங்களின் குறைப்பைப் பொறுத்தே மீள்குடியேற்றமும் அமையும்.அதாவது பாதுகாப்பு நோக்கு நிலையிலிருந்தே முடிவுகள் எடுக்கப்படும்.தமிழ் மக்களுக்குள்ள காணி அதிகாரங்களைக் குறித்த நோக்குநிலையிலிருந்தல்ல.