தமிழ் மக்கள் பேரவையின் தலைவராக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தொடர்ந்தும் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியில் விக்னேஸ்வரன் நீடிக்க முடியாது என்பதை முதலமைச்சரிடம் தெரிவிப்பதற்கான முயற்சிகளை வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் சிலர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக இவர்களினால் இரசிய கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உறுப்பினர்களிடம் கடிதம் ஒன்றில் கையயழுத்துப் பெறவும் முயற்சிக்கப்பட்டுள்ளது. எனினும் மாகாண சபை உறுப் பினர்களில் பலர் அக் கடிதத்தை மொட்டைக் கடிதம் என விமர்சித்ததுடன் அதில் கையயழுத்திடவும் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையில் தலைவராக இருக்க முடியாது எனவும் அவ் வாறு இருந்தால் முதலமைச்சராக இருக்க முடியாது எனவும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சரிடம் நேரடியாக கூறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இதன் ஆரம்பகட்டமாக யாழ்.பொது நூலகத்தில் நேற்றைய தினம் இரகசிய கூட்டம் ஒன்றை மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் சேர்ந்து நடத்தியுள்ளனர். பெரும்பாலான உறுப்பினர்கள் இக் கூட்டத்தை புறக்கணித் தும் உள்ளனர். கலந்து கொண்டவர்களில் சிலருக்கு கூட்டம் நடைபெறும் வரையில் எதற்கான கூட்டம் என்ற தெளிவு இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தின் போது வடக்கு மாகாண அவைத்தலைவர் மற்றும் இரு அமைச்சர்கள், ஒருசில உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தம்மை நாளை 20-ம் திகதி கட்டாயம் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதற்கான கடிதம் ஒன்று தயாரிக்கப்பட்டு, அதில் உறுப்பினர்களது கையெழுத்துக்களும் பெறப்பட்டுள்ளன.
வடக்கு,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான கருத்தரங்கு ஒன்று சுவிஸ்சர்லாந்து நாட்டின் ஏற்பாட்டில் யாழ். பொது நூலகத்தில் நேற்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இக்கருத்தரங்கி ற்கு வடக்கு மாகாண முதலமைச்சர், அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், மீன்பிடி அமைச்சர் டெனிஸ்வரன், கல்வி அமைச்சர் குருகுலராஜா, மாகாண சபை உறுப்பினர்கள் அஸ்மின், ஆனோல்ட், சயந்தன் உள்ளிட்ட சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கருத்தரங்கு நடைபெற்று கொண்டு இருக்கும் போது கூட்டத்தின் பின்வரிசையில் இருந்து எவ்வித உறுதிப்படுத்தலுமற்ற கடிதமொன்று மாகாணசபை உறுப்பினர்க ளுக்கு விநியோகிக்கப்பட்டு உள்ளது. அக்கடி தத்தில், இக்கருத்தரங்கு முடிவுற்றதும் உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கான கூட்டம் ஒன்று நடைபெறுமென குறிப்பிடப்பட்டிருந்ததோடு, அனைவரும் கலந்து கொள்ளுமாறும் கேட்கப்பட்டிருந்தது.
இதனை பார்த்த சக மாகாண சபை உறுப்பினர்கள் இது மொட்டைக்கடிதம் எனவும், இதனை வைத்து கொண்டு தாம் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளனர்.
பின்னர் கருத்தரங்கு முடிவுற்றதும் முன்னறிவித்தல் ஏதுமின்றி தாம் ஒரு கூட்டம் நடத்தப்போவதாக முதலமைச்சர் மீது அதிருப்தி கொண்ட சில இளம் மாகாண சபை உறுப்பினர்கள் கூறியுள்ளனர். இத்திடீர் கூட்டத்திற்கான காரணத்தை ஏனைய மாகாண சபை உறுப்பினர்கள் அவர்களிடம் கேட்ட போது, தம்மை முதலமைச்சர் நாளை 20-ம் திகதி சந்திக்க வேண்டும் என்ற கோரிக் கையை எழுத்து மூலம் முன்வைக்கப்போ வதாக கூறியுள்ளனர். சந்திப்புக்கான கார ணத்தை அறிய முற்பட்ட போது தெளிவான பதில் கூறப்படாத நிலையில், பெரும்பாலான உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என கூறி வெளியேறியுள்ளனர். பெரும்பாலான உறுப்பினர்களின் எதிர்ப்பை யும் மீறி அதிருப்தியாளர்கள் கூட்டத்தை நட த்தினர்.
கூட்டத்தின் முடிவில் நாளை 20-ம் திகதி முதலமைச்சர் தம்மை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு கடிதம் ஒன்றும் தயாரிக்கப்பட்டு உறுப்பினர்கள் சிலரின் கையெழுத்தும் பெறப்பட்டுள்ளது. கூட்ட த்தில் கலந்து கொள்ளாத ஏனைய உறுப்பினர்களுடன் தொடர்பை ஏற்படுத்திய அதிருப்தி யாளர்கள் சிலர், கடிதத்தில் கையெழுத்திட முடியுமா? இல்லையா? என கேட்டுள்ளனர்.
கூட்டம் போடுதற்கு நீங்கள் யார்? உங்கள் நேரத்துக்;கு எல்லாம் நாங்கள் வர முடியாது என மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் கடி ந்துள்ளனர். எனினும் தமது கோரிக்கை அடங்கிய கடிதத்தை மாகாண சபை உறுப் பினர்கள் சிலரின் கையெழுத்துடன் முதலமைச்சரிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட தரப்பு தெரிவிக்கின்றது.
இதேவேளை எதிர்வரும் 21 ஆம் திகதி யன்று கிளிநொச்சி கூட்டுறவுச்சபை மண்ட பத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளு மன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான ஒரு ங்கிணைப்பு கூட்டம் ஒன்று தமிழரசு கட்சி சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இக்கூட்டத்தில் முதலமைச்சர் மீது சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட உள்ளது எனவும்,
இதனை முன்னிட்டே முதலமைச்சர், தம்மை 20-ம்; திகதி சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிருப்தியாளர்கள் சிலரினால் முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் இது உள் நோக்கம் உடைய ஏற்பாடாகும் எனவும் உறு ப்பினர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.