ஆசிரியர்கள் அவர்களை பாதுகாப்பார்கள் என்று பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்பிவிட்டு தாங்கள் நிம்மதியாக இருந்துவரும் நிலையில் இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக பெற்றோர் தமது பிள்ளைகள் குறித்து அச்சநிலையில் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரையும் வேறு எந்த பாடசாலையிலும் கடமையாற்ற முடியாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் வலியுறுத்தியுள்ளனர். அங்கு விரைந்த மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெட்டியாராட்சி மற்றும் வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ரி.சுகுமாரன் ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ரி.சுகுமாரன், சம்பவம் தொடர்பில் உடனடியான விசாரணை நடாத்தப்படும் எனவும் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார். அத்துடன், குறித்த ஆசிரியர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு பாரபட்சமின்றி நடவடிக்கையெடுக்கப்படும் என மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெட்டியாராட்சி இதன்போது உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. |
மாணவியைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்! - நடவடிக்கை எடுக்குமாறு ஆர்ப்பாட்டம்
Related Post:
Add Comments