மனித உரிமைகள் அதிகளவில் மீறப்பட்டுள்ளன ; அமைச்சர் மஹிந்த சமரசிங்க

மனித உரிமைகள் அதிகளவில் மீறப்பட்டுள்ளன ; அமைச்சர் மஹிந்த சமரசிங்க

மனித உரிமைகள் அதிகளவில் மீறப்பட்டுள்ளன ; அமைச்சர் மஹிந்த சமரசிங்க

காணாமல்போனோர் மற்றும் கடத்தப்பட்ட பொதுமக்கள் தொடர்பில் உண்மைகளை கண்டறிய வேண்டும். கடந்த காலத்தில்  மனித உரிமைகள் அதிகளவில் மீறப்பட்டதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். குற்றவாளிகளுக்கு அதியுச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆட்கடத்தல் மற்றும் காணமல்போதல் என்ற விடயங்கள் கடந்த காலத்தில் மிகப்பெரிய குற்றச்சாட்டாக இருந்தது. குறிப்பாக யுத்தத்திற்கு பின்னரான காலகட்டத்தில் இலங்கைக்கு எதிரான சர்வதேச அழுத்தங்கள் மற்றும் நாம் முகம்கொடுக்க வேண்டியிருந்த குற்றச்சாட்டுகள் என்பன எமக்கு பெரும் சவாலாக இருந்தது. அதே சந்தர்ப்பத்தில் வெள்ளைவான் கடத்தல் சம்பவங்களும் இடம்பெறாமலில்லை. அந்த விவகாரங்கள் தொடர்பில் எம்மால் எதையும் கூற முடியாது.
ஆயினும் கடந்த காலத்தில் நடைபெற்ற ஆட்கடத்தல் மற்றும் காணாமல் போனவர்களை கண்டறிய வேண்டும். இந்த விடயத்தில் அரசாங்கம் அதிகளவில் அக்கறை காட்ட வேண்டும். அதேபோல் இந்த குற்றசாட்டுகளில் உண்மைகளை கண்டறியும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு அதி உச்ச தண்டனை வழங்கி சட்டத்தை நிலைநாட்ட வேண்டும். அதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல இடங்களில் சென்று அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றார். அது அவரது தனிப்பட்ட விருப்பாக இருக்கலாம். ஆனால் கடந்த காலத்தில் நடந்த குற்றங்களில் தற்போதைய அரசாங்கம் மீது குற்றம் சுமத்துவதாயின் அவை தொடர்பில் மேலதிக தகவல்களையும் அவரிடமே வினவ வேண்டும்.
எவ்வாறு இருப்பினும் சர்வதேச ரீதியில் எமக்கு எதிராக எழுந்த சிக்கல்களை இன்று எம்மால் சமாளிக்க முடிந்துள்ளது. அதுவே எமக்கு கிடைத்த வெற்றியாக கருத வேண்டும். அதேபோல் உண்மைகளை கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறக் கூடாது என்றார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila