பேரவை அறிக்கையை குழப்ப அவசரமாக கூடுகிறது தமிழரசுக்கட்சி!


தமிழ் மக்கள் பேரவை நாளை வெளியிடவுள்ள
அரசியல் தீர்வுத்திட்ட யோசனை தொடர்பிலான அறிக்கை வெளிவரவுள்ள நிலையில் அதனைக் குழப்பும் நோக்கில் தமிழரசுக்கட்சி மாகாணசபை உறுப்பினர்களை செயற்பாட்டில் இறக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் பணிப்பிற்கமைய அனைத்து அமைச்சர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களை மாகாணசபை அலுவலத்தில் இன்று கூடுமாறு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 5மணியளவில் கைதடியில் உள்ள மாகாணசபை அலுவலகத்தில் அவசர சந்திப்பு இருப்பதால் அனைவரையும் ஒன்றுகூடுமாறு அழைப்புவிடப்பட்டுள்ளதாக தமிழ்கிங்டத்தின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாழ்.பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கத்தில் வைத்தே தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட யோசனை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வெளிநாட்டிலுள்ள தமிழரசு தலைமையால் விடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக இறுதி நேரத்தில் பல்கலைக்கழக சமூகம் மண்டபத்தினை வழங்க முடியாது என மறுப்புத் தெரிவித்திருந்த நிலையில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்திலேயே குறித்த நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது,
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila