ஆட்டம் காணுமா கூட்டு ஆட்சி?

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்து ஐக்­கிய தேசியக் கட்சி அமை த்த கூட்டு அர­சாங்­கத்தின் ஆயுள்­காலம் இன்­னமும் எவ்­வ­ளவு காலத்­துக்கு நீடிக்கப் போகி­றது என்ற கேள்வி இப்­போது அர­சி யல் அரங்கில் எழுந்­தி­ருக்­கி­றது.

அதற்குக் காரணம், இந்த இரண்டு பிர ­தான கட்­சி­க­ளுக்கு இடை­யிலும் காணப்­பட்டு வரும் இழு­ப­றி­களும் மோதல்­களும் தான்.

ஒரு பக்­கத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ 52 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை வைத்துக் கொண்டு ஆட்­சி யைக் கவிழ்க்கப் போவ­தாக அவ்­வப்­போது மிரட்டிக் கொண்­டி­ருக்­கிறார்.

கூட்டு அர­சாங்­கத்தில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும் கூட தனித்து ஆட்சி அமைப்­பது பற்றி அதிகம் பேசி வரு­கி­றது.

ஐ.தே.க.வும், ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி யும் ஒன்­றை­யொன்று வெளிப்­ப­டை­யாக விமர்­சிக்கத் தொடங்­கி­யுள்ள நிலையில், இந்தக் கூட்டு அர­சாங்கம் நீடித்து நிலைக்­குமா இடை­யி­லேயே கவிழ்ந்து போகுமா என்ற கேள்­விகள் எழுந்­தி­ருக்­கின்­றன.

இரண்டு கட்­சி­களும் கூட்டு அர­சாங்கம் ஒன்றை அமைப்­ப­தற்கு 2015 ஆகஸ்ட் மாதம் உடன்­பாடு ஒன்றை செய்­தி­ருந்­தன. இரண்டு ஆண்­டு­க­ளுக்கு இணைந்து செயற்­படும் வகையில் தான் இந்த உடன்­பாடு கையெ­ழுத்­தி­டப்­பட்­டது. அந்த உடன்­பாடு வரும் ஆகஸ்ட் மாதத்­துடன் நிறை­வ­டை­ய­வுள்­ளது.

இன்னும் நான்கு மாதங்கள் முடிந்த பின் னர், இரண்டு கட்­சி­களும் இந்த உடன்­பாட்டை நீடித்துக் கொள்ள வேண்டும் அல் ­லது உடன்­பாடு முறிந்து போய்­விட்­ட­தாக பகி­ரங்­க­மாக அறி­விக்க வேண்டும்.

எதைச் செய்­வ­தா­னாலும் அதனை மக்­க­ளுக்கு அவர்கள் நியா­யப்­ப­டுத்த வேண்­ டி­யி­ருக்கும். அவ்­வாறு குற்­றச்­சாட்­டு­களை அடுக்கப் போனால், அது அவர்­களின் தலை

யில் அவர்­களே மண் அள்ளிப் போட்ட நிலை­யாக மாறி விடும். இது தான் இரு கட்­சி­க­ளுக்கும் இடையில் உள்ள பிரச்­சினை. ஜனா­தி­பதி மைத்­த­ிரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலைமை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சி யும், 2015ஆம் ஆண்டு இணக்­கப்­பாடு ஒன்றை ஏற்­ப­டுத்திக் கொண்­ட­மைக்கு, காரணம், இரண்டு பேருக்கும் பொது எதி­ரி­யான மஹிந்த ராஜபக் ஷவை பல­வீ­னப்­ப­டுத்­து­வது தான்.

மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் அர­சி­யலில் பலம் பெறும் முயற்­சி­களில் ஈடு­பட்டு வந்த நிலையில், அதனை முளை­யி­லேயே கிள்ளி எறிய வேண்­டு­மானால், சுதந்­திரக் கட்­சி­யி­ன­ரையும் அதி­கா­ரத்­துக்கு இழுத்து வர வேண்­டிய தேவை மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் இருந்­தது. ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் இருந்­தது.

அர­சாங்­கத்தில் இணைந்து கொண்ட போது, ஐ.தே.க. தமக்கு வலு­வான அமைச்­சுக்­களை வைத்துக் கொண்டு, ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு குறைந்த அதி­காரம் கொண்ட- முக்­கி­யத்­து­வ­மற்ற அமைச்­சுக்­க­ளையே வழங்­கி­யது. இதனால், மஹிந்த அர­சாங்­கத்தில் சக்­தி­வாய்ந்த அமைச்­சர்­க­ளாக இருந்­த­வர்கள் கூட பிரதி அமைச்சர் அல்­லது இரா­ஜாங்க அமைச்சர் பத­வி­களைப் பெற்றுக் கொள்ள வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

இரண்டு கட்­சி­க­ளுக்கும் இடையில் ஏற்

பட்ட முதல் முரண்­பாடு இது தான். இங்­கி­ருந்து தொடங்­கிய விரிசல் இப்­போது, ஒவ்­வொரு விவ­கா­ரத்­திலும் எதி­ரொ­லித் துக் கொண்­டி­ருக்­கி­றது. ஐ.தே.க அமைச்­சர்கள் கொண்டு வரும் திட்­டங்­களை ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி அமைச்­சர்கள் எதிர்ப்­பது, விமர்­சிப்­பது, வழக்­க­மான நிலை­யாக மாறி­யி­ருக்­கி­றது.

அது­போ­லவே, சுதந்­திரக் கட்சி அமைச்­சர்கள் கொண்டு வரும் திட்­டங்­களை ஐ.தே.க அமைச்­சர்கள் பல­வீ­னப்­ப­டுத்தி, முட்­டுக்­கட்டை போடு­கின்­றனர். இதனால் அமைச்­ச­ரவைக் கூட்­டங்கள் அண்­மைக்­கா­ல­மா­கவே கார­சா­ர­மான வாக்­கு­வா­தங்கள் நடக்­கின்ற இட­மாக மாறி­யுள்­ளன.

பல திட்­டங்கள் அமைச்­ச­ரவைப் படிக்­கட்­டு­களைத் தாண்ட முடி­யாமல் சிக்கிப் போயுள்­ள­தற்கும் இரண்டு கட்­சி­க­ளுக்கும் இடையில் உள்ள இந்த அடிப்­படை முரண்­பா­டுகள் தான் காரணம்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அதி­கா­ரத்தை அதி­க­ளவில் பயன்­ப­டுத்­து­வ­தாக ஒரு குற்­றச்­சாட்டு ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யினர் மத்­தியில் உள்­ளது. அதே­வேளை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்­தாமல் இருப்­ப­தா­கவும் அவ­ரது கட்­சி­யி­ன­ரா­லேயே குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழித்து, பாரா­ளு­மன்­றத்­துக்கு அதி­கா­ரத்தை அளிப்­ப­தான வாக்­கு­று­தியை வழங்கித் தான் இப்­போ­தைய அர­சாங்கம் பத­விக்கு வந்­தது. நிறை­வேற்று அதி­கா­ரத்தை முழு­மை­யாக ஒழிப்­ப­தற்கு அர­சாங்கம் தயா­ராக இல்­லா­வி­டினும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது நிறை­வேற்று அதி­கா

ரத்தை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அள­வி­லேயே பயன்­ப­டுத்தி வரு­கிறார். ஒரு வகையில் பாரா­ளு­மன்­றத்­துக்கு அதி­காரம் அளிக்கும் செயற்­பா­டா­கவும் இதனைக் கரு­தலாம். அவ்­வா­றான நிலையில், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அதி­கா­ரங்­களை மிகை­யாகப் பயன்­ப­டுத்­து­வ­தாக ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யினர் சுமத்தும் குற்­றச்­சாட்­டுகள் அபத்­த­மா­ன­வை­யாக உள்­ளன.

பாரா­ளு­மன்­றத்­துக்கு பதி­ல­ளிக்க வேண்­டிய கடப்­பாடு உடை­யவர் பிர­தமர். பாரா­ளு­மன்­றத்­துக்கு அளிக்­கப்­பட்ட அதி­கா­ரங்­களை அவரே பயன்­ப­டுத்த முடியும். அவ்­வா­றாயின், பிர­தமர் அதிக அதி­கா­ரங்­களை பயன்­ப­டுத்­து­வ­தாக குற்­றச்­சாட்­டு­களை கூறு­வது தேர்தல் கால வாக்­கு­று­தி­களை மீறு­கின்ற செய­லாகும்.

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி அர­சாங்­கத்­துடன் இணைந்­தி­ருந்­தாலும் அதற்குள் பல முகங்கள் உள்­ளன. மஹிந்த ராஜபக் ஷவை வெளிப்­ப­டை­யாக ஆத­ரிப்­ப­வர்கள், அவரை வெளிப்­ப­டை­யாக எதிர்ப்­ப­வர்கள், வெளிப்­ப­டை­யாக எதிர்ப்­பையோ ஆத­ர­வையோ வெளிப்­ப­டுத்­தாமல் மதில் மேல் பூனை­யாக இருப்­ப­வர்கள் என்று மூன்று முகங்­களைக் கொண்­ட­வர்கள் சுதந்­திரக் கட்­சியில் இருக்­கின்­றனர்..

கூட்டு அர­சாங்­கத்தில் இருந்து கொண்டே, மகிந்த ராஜ­பக்­சவை ஆத­ரிப்­ப­வர்­களும் இருக்­கி­றார்கள். சிலர் மஹிந்த ராஜபக் ஷவின் நிகழ்ச்சி நிர­லுக்குள் செயற்­ப­டு­கி­றார்கள் என்ற சந்­தே­கங்­களும் இருக்­கின்­றன.

அர­சாங்­கத்தில் இருக்­கின்ற சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்­க­ளுடன் சேர்ந்து ஆட்­சியைக் கவிழ்ப்பேன் என்று மஹிந்த ராஜபக் ஷ அடிக்­கடி கூறிக் கொள்­வதும் கூட அந்தச் சந்­தே­கத்தை வலுப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றது.

ஐ.தே.கவுடன் இணைந்­தி­ருப்­பதால் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி அடங்கி ஒடுங்கி இருக்க வேண்­டி­யுள்­ளது, தனித்து ஆட்­சி­ய­மைக்க வேண்டும் என்ற கருத்து அந்தக் கட்­சியின் பல உயர்­மட்டத் தலை­வர்­க­ளிடம் இருக்­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சி வீழ்த்­தப்­பட்டு இரண்டு ஆண்­டுகள் தான் ஆகின்­றன அதற்குள் தனித்து ஆட்­சி­ய­மைக்கும் ஆசை ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சிக்கு வந்து விட்­டது.

1977ஆம் ஆண்டு சிறி­மாவோ தலை­மை­லான ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி ஜே.ஆரிடம் இழந்த ஆட்­சியை, 1994ஆம் ஆண்டு சந்­தி­ரி­காவின் தலை­மையில் தான் மீளப்­பெற முடிந்­தது. அப்­போது கிட்­டத்­தட்ட 17 ஆண்­டுகள் எதிர்க்­கட்சி வரி­சையில் பொறு­மை­யோடு இருக்க நேரிட்­டது.

ஆனால், ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யி­ன­ருக்கு இப்­போது, அந்தப் பொறு­மை­யில்லை. அர­சாங்­கத்தில் பங்­கா­ளி­யாக இருந்­தாலும் தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று அங்­கு­மிங்­கு­மாக அங்­க­லாய்க்கத் தொடங்­கி­யுள்­ளனர்.

இவர்­களின் ஆட்­டத்­துக்கு ஆட வேண்­டிய பொம்­மை­யாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் மாறி­யி­ருக்­கிறார். அவரும் கூட விரைவில் தனித்து ஆட்­சி­ய­மைப்போம் என்று அண்­மையில் கூறி­யி­ருக்­கிறார். ஆனால் அது ஒன்றும் சுல­ப­மான காரி­ய­மில்லை என்­பது அவ­ருக்கு நன்­றா­கவே தெரியும்.

மஹிந்த ராஜபக் ஷ இல்­லாத ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சிக்கு தனித்து ஆட்­சி­ய­மைக்கும் அள­வுக்கு, செல்­வாக்கு இல்லை. இந்தப் பல­வீ­னத்தை வைத்துக் கொண்டு தான் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியை மடக்கி வைத்­தி­ருக்­கிறார் ரணில் விக்­கி­ர­ம­சிங்க.

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சிக்கு மைத்­தி­ரி­பால சிறி­சேன தலைமை தாங்­கி­னாலும், அதில் மஹிந்த ராஜபக் ஷ விசு­வா­சிகள் அதி­க­ளவில் இருக்­கி­றார்கள். இந்த இரண்டு தரப்­பி­ன­ரையும் ஒன்று சேர­வி­டாமல் ஐ.தே.கவே தடுத்து வரு­தாக பர­வ­லான கருத்து அந்தக் கட்­சி­யி­ன­ரிடம் உள்­ளது.

இரண்டு தரப்­பு­க­ளையும் பிரித்­தா­ளு­வதன் மூலம், ஐதேக பல­முடன் இருக்க முடியும். அதே­வேளை ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி பல­ம­டை­வ­தையும் தடுக்க முடியும். ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியை பல­வீ­னப்­ப­டுத்தி வரு­கிறார் என்ற கருத்து, கட்­சிக்குள் வலுப்­பெற்று வரும் நிலையில் தான் கூட்டு அர­சாங்­கத்தை விட்டு விலகி தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்ற கருத்தும் வலு­வ­டைந்து வரு­கி­றது.

வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டு கட்­சி­க­ளுக்கும் இடை­யி­லான உடன்­பாடு முடி­வுக்கு வரு­வ­துடன், அர­சாங்­கத்தை விட்டு விலகி விட வேண்டும் என்று இப்­போதே ஒரு சாரார் கூறத் தொடங்கி விட்­டனர்.

தற்­போ­தைய அர­சாங்கம் மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வில்லை. பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு தீர்வு காண­வில்லை. தற்­போ­தைய அர­சாங்­கத்தின் ஊழல் ஒழிப்புக் கொள்கை, மத்­திய வங்கி பிணை முறி மோச­டியால் கேள்­விக்­குள்­ளா­கி­யி­ருக்­கி­றது.

இப்­ப­டியே கூட்டு அர­சாங்­கத்­துக்கு மக்கள் மத்­தியில் இருந்த கவர்ச்சி குறையத் தொடங்­கி­யுள்ள நிலையில், இதி­லி­ருந்து நழுவிக் கொள்­வதே பாது­காப்­பா­னது என்று ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியில் உள்ள சிலர் நினைக்­கி­றார்கள்.

ஆனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவோ அவ்­வாறு ஒரு முடிவை எடுப்பார் என்று எதிர்­பார்ப்­ப­தற்­கில்லை. ஏனென்றால் அவர் இன்று அதி­கா­ரத்தில் இருப்­ப­தற்கு, ஐ.தே.க பிர­தான காரணம். அந்த நன்றிக் கடனை அவர் மறக்­க­மாட்டார்.

அடுத்து, தான் கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற வேண்­டு­மானால், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அர­சாங்கம் பத­வியில் இருக்க வேண்டும். ஒரு­வேளை இந்த அர­சாங்கம் கவிழ்க்­கப்­படும் நிலை ஏற்பட்டு மீண்டும் மஹிந்த ராஜபக் ஷ அதிகாரத்துக்கு வரும் நிலை ஏற்பட்டால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்தாலும், அடங்கிப் போக வேண்டிய நிலை தான் ஏற்படும் என்பதும் ஜனாதிபதிக்குத் தெரியும்.

எனவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை எப்படியும், கூட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பப் போவதில்லை. இத்தகைய கட்டத்தில், தற்போதைய கூட்டு அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் வேண்டுமானால் வெளியேறும் நிலை ஏற்படலாம்.

அவர்கள் மஹிந்த அணியுடன் இணைவார்கள் என்று கூற முடியாது. தம்மைப் பரிசுத்தமானவர்களாக காட்டிக் கொள்ள முனையும் அவர்கள் மீண்டும் சேற்றுக்குள் விழ விரும்பமாட்டார்கள்.

தற்போதைய அரசாங்கம் வரும் நாட்களில் ஆட்டம் காணும் நிலையைச் சந்தித்தாலும், அடியோடு பெயர்ந்து விழுவதற்கான வாய்ப்புகள் அரிது தான். ஏனென்றால், இரண்டு பிரதான கட்சிகளுக்குமே இந்த வாய்ப்பை நழுவ விட்டால், வேறு கதி இல்லை.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila