தமிழர் ஒருவரிற்கு சொந்தமான குறித்த காணியினில் 2009 இன் பின்னராக திட்டமிட்ட வகையினில் பௌத்த விகாரையொன்று அமைக்கப்பட்டு வருகின்றது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காணி சுவீகரிப்பினை ஆட்சேபித்தும் போராடி வரும் அவர் தனது காணிகளை விடுவிக்க நீண்ட காலமாக போராடியும் வருகின்றார்.
இந்நிலையில் தற்போது மாற்றுக்காணிகள் வழங்குவதாக கூறி நிர்ப்பந்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருகின்றது.எனினும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ள அவர் தொடர்ந்தும் தனது காணியை விடுவிக்க போராடிவருகின்றார்.