எல்லாவற்றையும் யாழ். நகருக்குள் முடக்காதீர்கள்! சிறீதரன்

எல்லா திட்டங்களையும் யாழ்ப்பாணம் நகரத்துக்குள் முடக்காதீர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, அங்கஜன் இராமநாதன் ஆகியோர் இணைத் தலமையில் காலை 9 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தின் போது நடேஷ்வரா கல்லூரி விடுவிப்பு தொடர்பாக, காங்கேசன்துறை நடேஷ்வரா கல்லூரி உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்து விடுவிக்கப்படும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
நடேஷ்வரா கல்லூரி விடுவிக்கப்பட்டால் அங்கே பாடசாலையை உடனடியாக இயங்குவதற்கு வசதிகள் உள்ளனவா என இன்றைய கூட்டத்தில் வினவப்பட்டபோது.
எனினும் விடுவிக்கப்பட்டதன் பின்னதாக அது குறித்துப் பேசப்படும்  என கல்வி அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில் நடேஷ்வரா கல்லூரியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் விரைவில் அது விடுவிக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தொழிற்பயிற்சி திணைக்களத்திற்கு மாவட்ட காரியாலயம் ஒன்று இல்லை. எனவும் அதற்காக யாழ்.நகரிற்குள் ஒரு நிலம் மற்றும் கட்டிடம் வேண்டும். எனவும் இன்றைய கூட்டத்தில் அதிகாரிகள் கேட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த கோரிக்கைகளுக்கு பதில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்,

எல்லாவற்றையும் யாழ்.நகரத்துக்கள் முடக்காதீர்கள். தற்போது போதனா வைத்தியசாலைக்கு இடம் பற்றாது. நோயாளிகள் நிலத்தில் படுக்கிறார்கள். பேருந்து நிலையத்தை வெளியே எடுங்கள் என்றால் ஒருவருக்கும் விருப்பமில்லை. மறுபக்கம் நிலத்தடி நீர் மாசுபடுகின்றது.
முறையான வடிகால்கள் இல்லை. இந்த லட்சணத்தில் எல்லாவற்றையும் யாழ். நகருக்குள் முடக்குவதை நிறுத்துங்கள்.
அல்லைப் பிட்டியில் நல்ல குடிநீர் வசதி இருக்கிறது. நிலம் இருக்கிறது. அங்கே கொண்டு செல்லுங்கள் தற்போது பாதைகளும் சீராகி விட்டன. 5 நிமிடத்தில் யாழ்.நகரில் இருந்து செல்லலாம். எனவே அதனை செய்யுங்கள் என அவர் அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் தீவுப் பகுதியில் காணி கொடுக்கலாம் என குறித்த திணைக்களத்தாருக்கு தெரிவித்தார்.
இன்றைய கூட்டத்தில் வலிகாமம் கல்வித்திணைக்கள பணிப்பாளரை நோக்கி உங்கள் வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றின் நிகழ்வில் முதலமைச்சரை விருந்தினராக அழைத்தமைக்காக அந்த பாடசாலை அதிபரை நீங்கள் திட்டினீர்களா? என மாகாணசபை உறுப்பினர் எம்,கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த குறித்த அதிகாரி, நான் அவ்வாறு திட்டவில்லை. என கூறியதுடன் முதலமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு வரும்போது என்னையும் அழையுங்கள் அவ்வாறு அழைக்காவிட்டால் அது அவர்களை அவமரியாதை செய்யும் செயல் என்பதை சுட்டிக்காட்டி வருகிறேன்.
தவிர பாடசாலை அதிபரை நான் திட்டவில்லை என கூறினார்.
இன்றைய கூட்டத்தில் கல்வி, மின்சாரம், மற்றும் வீடமைப்பு ஆகிய 3 துறைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளதுடன் இன்றைய கூட்டம் கடந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பேச முடியாத மற்றும் தவற விடப்பட்ட விடயங்கள் தொடர்பாக பேசுதவற்காக ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila