வடக்கு – கிழக்கு இணைந்த மாநிலமாக மாற்றப்பட வேண்டும்: கிழக்கு மக்கள்
தமிழர்களின் தாயகப்பகுதிகளான வடக்கு – கிழக்கு இணைந்த மாநிலமாக மாற்றப்பட வேண்டும் என கிழக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருகோணமலையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற, அரசியலமைப்பு தொடர்பான மக்களின் யோசனைகளை கேட்டறியும் அமர்வில் கலந்துகொண்டு தமது யோனைகளை முன்வைக்கும் போதே அப்பகுதியினைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார். இந்தநிலையில் மதகுருமார் அரசியலில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என அப்பகுதியினைச் சேர்ந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Related Post:
Add Comments