இன்று நாடாளுமன்றத்தில் இது தொடர்பான தகவலை ரணில் விக்கிரமசிங்க வெளியிடுகையில், போரின் முடிவில் இலங்கை இராணுவத்தினரால் 150கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. அதில், 131 மில்லியன் பெறுமதியான 30 கிலோத் தங்கமானது மத்தியவங்கியிடம் 28 தடவைகளாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்னமும் 80 கிலோத் தங்கம் இலங்கைப் படையினரிடம் உள்ளது. அது தொடர்பில் இன்னமும் மதிப்பீடு செய்யவில்லை எனவும், மிகுதி 40கிலோ தங்கத்துக்கு என்ன நடந்ததெனத் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விடுதலைப்புலிகளின் வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ள நகைகளின் உரிமையாளர்களை இனம்கண்டு அவர்களது நகைகள் அனைத்தும் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட நகைகளில் ஒருதொகுதி இராணுவத்தினரிடம்!
போரின் இறுதிநேரத்தில் கைப்பற்றப்பட்ட விடுதலைப்புலிகளின் ஒரு தொகுதி நகைகள் இன்னமும் இராணுவத்தினரிடமே உள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
போரின் இறுதி நேரத்தில் விடுதலைப் புலிகளின் வங்கியான தமிழீழ வைப்பகத்தில் வைக்கப்பட்ட தமிழ் மக்களின் நகைகள் திருப்பி அவர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்த அவர் கைப்பற்றப்பட்ட நகைகள் அனைத்தும் மத்திய வங்கியிலும் இராணுவத்தினரிடமும் தான் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் ஒரு தொகுதி நகை உரியவர்களிடம் வழங்கப்பட்டதாகவும் ஏனைய நகைகளும் உரியவர்களிடம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். அத்துடன் உண்மையான நகை உரிமையாளர்களை அடையாளம் காண வடக்கிலுள்ள அரசியல் கட்சிகள் உதவ முன்வரவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.