அமெரிக்கா கடை ஒன்றில் திருடனை விரட்டியடித்த வீரப்பெண் தமிழா…??
அமெரிக்காவில் கடை ஒன்றில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற திருடனை பெண் ஊழியர் விரட்டியடித்தார். அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தில் உள்ள பலசரக்கு கடைக்குள் புகுந்த நபர் ஒருவர் அங்குள்ள பொருட்களை வாங்குவது சுற்று வந்துள்ளார். பின்னர் குளிர்பானம் ஒன்றை மட்டும் எடுத்து சென்று அங்கிருந்த பெண் ஊழியரிடம் பில் போடும்படி கூறியுள்ளார். தமிழர் போன்ற தோற்றமுடைய அப்பெண் ஊழியரும் பில் போட முயன்றுள்ளார். அப்போது, தனது பாக்கெட்டில் ஒளித்து வைத்திருந்த துப்பாக்கியை வெளியே எடுத்த அந்த நபர் பெண் ஊழியரை மிரட்டி பணத்தை திருட முயன்றுள்ளார். முதலில் பயந்த அப்பெண் பின்னர் அவரை தாக்க தொடங்கியுள்ளார். மேலும் அருகில் இருந்த சுத்தியல் மூலம் திருடனை தாக்க முயன்றுள்ளார். இதனால் பயந்து போன திருடன் அங்கிருந்து ஓடி சென்றுள்ளார். எனினும் அப்பெண் திருடனை துரத்தி சென்று தாக்க முயன்றுள்ளார். அதற்குள் திருடன் தப்பி சென்றுள்ளான். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சி.சி.டி.வி காமெராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை வைத்து திருடனை பொலிசார் தேடி வருகின்றனர். -
Related Post:
Add Comments