ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் தொடர்பில் தமிழக அரசின் கடிதம் குறித்து மத்திய அரசு ஆராயும். இவர்களின் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படும்” என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளின் விடுதலை தொடர்பாக அறிவிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பல அரசியல் தலைவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்னர். அந்த வகையில் , ராஜீவ்காந்தி கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளை விடுவிக்க கூடாது என காங்கிஸ் கட்சி கருத்து தெரிவித்து வருகின்றது.
இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) மக்களவையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக விவாதங்கள் எடுப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் ஞானதேசிகன், மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மெக்ரிசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
இந்த கடிதம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மக்களவையில் விளக்கம் அளிக்கும்போது மேற்கண்டவாறு கூறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.