இறுதி யுத்தத்தில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் யுத்த குற்றங்கள் மற்றும் வெள்ளைக்கொடி விவகார சர்ச்சை, இறுதி யுத்த நேரத்தில் இராணுவத்தினர் வசம் சரணடைந்த பொதுமக்களின் நிலைமைகள் தொடர்பில் பொதுமக்கள் முன்வைத்து வரும் வாக்குமூலங்கள் தொடர்பிலும் அரசாங்கம் தீவிரமாக ஆராய்கிறது. இந்த விவகாரங்கள் சர்வதேச விசாரணைகளுக்கு உட்படுத்த வேண்டும் என சரத் பொன்சேகா கூறிவருகின்றார். ஆனால் இப்போதிருக்கும் நிலையில் சரவதேச விசாரணைகள் அவசியமில்லை. இப்போதிருக்கும் நிலையில் உள்ளக விசாரணைகள் மூலம் இப்பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வைக் காணும். கடந்த ஆட்சியில் உள்ளக விசாரணைகளின் மூலம் தீர்வு எதுவும் கிடைக்காமையே சர்வதேச விசாரணைக்கான தேவை எழுந்தது. இந்த நிலையினாலேயே சர்வதேச அழுத்தங்களில் இருந்து நாட்டையும் இராணுவத்தையும் காக்க ஐக்கிய தேசியக் கட்சியும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்தன. பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. மேலும், உள்ளக விசாரணைகளாக அவை அமைந்தாலும் இராணுவம் செய்தவை எனக்கூறப்படும் குற்றங்களுக்கு தண்டனை அமைக்கும் பொறிமுறையாக அவை ஒரு போதும் இருக்காது எனவும் அவர் கூறினார். |
போர்க்குற்றங்களுக்காக இராணுவம் தண்டிக்கப்படாது! - என்கிறார் அமைச்சர் மகிந்த சமரசிங்க
Related Post:
Add Comments