மனித உரிமை செயற்பாட்டாளரான சுனிலா அபேசேகரவை நல்லாட்சி அரசாங்கம் காணாமல் போனவர்களை தேடி அறியும் செயலகத்தின் உறுப்பினராக நியமித்தமை இராணுவத்திற்கு செய்த மிகப்பெரிய அநீதி என இராவணா பலய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
|
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி.தசநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்களை பார்க்க வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்த போது சத்தாதிஸ்ஸ தேரர் இதனை கூறியுள்ளார்.
'சுனிலா அபேசேகர என்பவர், இலங்கை இராணுவத்திற்கு எதிராக சர்வதேசத்திற்கு விடயங்களை முன்வைத்த பெண். அவரை காணாமல் போனவர்களை தேடி அறியும் செயலகத்தின் பணிகளுக்கு நியமித்துள்ளதால் படையினருக்கு அந்தோகதிதான்.அதேபோல் அரசாங்கம் நன்றாக மாட்டிக்கொண்டுள்ளது. பதவி வந்த போது துறைமுக நகரம் குறித்து சண்டித்தனம் பேசிய அரசாங்கத்திற்கு அதன் பின்னர் ஹம்பாந்தோட்டை துறைமுகம் மட்டுமல்ல காணிகளையும் சீனாவுக்கு கொடுக்க நேர்ந்தது என இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.
சத்தாதிஸ்ஸ தேரரின் இந்த கருத்துக்கு பதிலளித்த சில சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,பௌத்த காவி என்ற போர்வையில், சத்தாதிஸ்ஸ தேரர் பகையுணர்வை பரப்பி வருகிறார்.அவர் சிறந்த மனநிலையில் இருக்கும் உண்மையான பௌத்த பிக்குவாக இருந்தால், கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் திகதி காலமான சுனிலா அபேசேகரவை காணாமல் போனவர்கள் தொடர்பான செயலகத்தில் பணிக்கு அமர்த்தியுள்ளதாக பேசியிருக்க மாட்டார்.
பல ஆண்டுகளாக இனவாதம் மற்றும் மத வாதத்தை தூண்டி, அதற்காக அமைச்சுக்களின் வாகனங்களை பெற்றுக்கொண்டு ஆலோசகர் பதவிகளில் இருந்து அனுபவித்த சுகமான வாழ்க்கை இல்லாமல் போயுள்ளதால், இந்த பிக்குமாறுக்கு அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது இந்த பிக்குமார், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை மூக்கில், புகையிலையை நுழைப்பது போல் காண்கின்றனர் எனக் கூறியுள்ளனர்.
|
நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்தவர் காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினராம்!
Related Post:
Add Comments