போர்க்குற்ற விசாரணை நடைபெற்றாலும் படையினருக்கு தண்டனை வழங்கப்படமாட்டாது என்று அமைச்சர் மகிந்த அமரசிங்க கூறியுள்ளார்.
இறுதி போர்க்குற்றம் தொடர்பில் விசாரணை மட் டுமே நடைபெறும். படையினருக்கு தண்டனை வழங் கப்படமாட்டாது என்பது அமைச்சர் மகிந்த அமரசிங்கவின் அறிவிப்பு.
இது ஒருபுறமிருக்க போர்க்குற்ற விசாரணை தொடர்பில் சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை என்று இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
ஆக, போர்க்குற்ற விசாரணை நடைபெற்றாலும் படையினருக்கு தண்டனை வழங்கப்படமாட்டாது என் பதும் சர்வதேச நீதிபதிகள் போர்க்குற்ற விசாரணையில் பங்கேற்க முடியாதென்பதும் இலங்கை அரசின் போக்கை தெட்டத்தெளிவாக காட்டி நிற்கிறது.
அதாவது போர்க்குற்ற விசாரணையில் குற்றவாளிகளாக படையினர் அடையாளப்படுத்தப்பட்டாலும் அவர்களுக்கு தண்டனை இல்லை என்பதானது போர்க்குற்ற விசாரணையால் எவ்வித பிரயோசனமும் இல்லை என்ற பொருளைத் தரும்.
அதேநேரம் விசாரணை நடவடிக்கையில் வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்க முடியாதென்பதானது எல் லாம் நாங்களே விசாரிப்போம்; நாங்களே தீர்ப்பு எழுதுவோம்; எழுதுகின்ற தீர்ப்பை சர்வதேச சமூகமும் தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகும்.
இதுவே, இலங்கை அரசின் நிலைப்பாடு. நல்லாட்சி என்ற பெயரில் அமைந்த ஆட்சியின் நிலைப்பாடும் இது வெனில், தமிழ் மக்களுக்கு இலங்கை அரசு எதைக் கொடுக்கும்? அவ்வாறு கொடுப்பது எவ்வளவு காலத்து க்கு நிலைக்கும்? என்பதை சர்வதேச சமூகம் தான் தீர் மானிக்க வேண்டும்.
வன்னிப் பெருநிலப்பரப்பில் இடம்பெற்ற போரில் தமிழின அழிப்பு நடந்தது என்ற உண்மை, மகிந்த ராஜபக்ச வின் தேர்தல் தோல்விக்காக அமெரிக்காவால் விட்டுக்கொடுக்கப்பட்டது.
மகிந்த ராஜபக்சவே பிரச்சினைக்குரியவராக அமெரிக்க அரசு பார்த்தது. அந்தப் பார்வை மகிந்தவினதும் சீனாவினதும் உறவு காரணமாக ஏற்பட்டதாகும்.
மாறாக தமிழர்கள் கொல்லப்பட்டது பற்றியோ, தமிழின அழிப்பு நடந்தது பற்றியோ சர்வதேச சமூகத்துக்கு அக்கறை இருக்கவில்லை என்பதே உண்மை.
இத்தகையதோர் நிலைமைதான் தமிழ் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தன்னை ஒரு பேரினவாத சார்புடையவராகக் காட்டத் தலைப்பட்டுள்ளார்.
இலங்கை விடயத்தில் அக்கறை கொண்ட அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் வன்னிப் பெருநிலப்ப ரப்பில் நடந்த தமிழின அழிப்பை முதல்நிலைப்படுத்தி சர்வதேச விசாரணையினை வலியுறுத்தியிருந்தால், இன்று இனப்பிரச்சினைக்கான தீர்வென்பது சாத்தியமாகி இருக்கும்.
ஆனால் மகிந்த ராஜபக்ச தோற்று விட்டார். இப் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவர்கள் நாம் கூறுவதை ஒரு போதும் மீறமாட்டார்கள் என்று அமெரிக்காவும், இந்தி யாவும் கருதிக்கொள்ள இலங்கையின் நல்லாட்சியும் தனது சுயரூபத்தை காட்டத் தலைப்பட்டுள்ளது.
ஆக, ஒட்டுமொத்தத்தில் அழிவுகளைச் சந்தித்த தமிழினத்தை இலங்கை அரசும் சர்வதேச சமூகமும் சேர்ந்து ஏமாற்றி விட்டன என்பது உண்மையாயிற்று.