இந்தியாவிடம் நம்பிக்கை அமெரிக்காவிடம் கோரிக்கை பனங்காட்டான்


இலங்கையின் நல்லாட்சி அரசாங்கத்தில் முடிவெடுக்கும் அதிகாரங்களைக் கொண்டவர் யார்?
ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராகத் தெரிவிக்கும் கருத்துகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக இருக்கின்றன.


ஒரே விடயத்தில் பலருடைய கருத்துகள் வெவ்வெறு விதமானவையாக அமைகின்றன.
இவை தற்செயலானவையா? அல்லது எதிர்காலத்தில் தப்புவதற்கான முன்னேற்பாடா?
மகிந்த ராஜபக்சவின் நிர்வாகக் காலத்திலும் இப்படியான நிலைமை தொடர்ச்சியாக இருந்தது.
மகிந்த – கோதபாய – பசில் ராஜபக்சக்களும், கெகலிய ரம்புக்வெல, நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமானந்த என்ற அமைச்சர்களும் இவ்வாறுதான் ஒரு விடயத்தைக் குழப்பும் வகையில் வெவ்வேறான கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.
ஒவ்வொருவரும் தம் கருத்தை வெளிப்படுத்த தமக்கென ஒவ்வொரு ஊடகத்தைப் பயன்படுத்தி வந்தனர்.
தமிழரின் அரசியல் விவகாரத்தில் எல்லாமே பூச்சியமாகப் போனதற்கு இது முக்கியமான காரணமாக இருந்தது.
இப்போது, “உரல்தான் மாறியது, உலக்கை மாறவில்லை” என்று ஒரு முக்கியமானவர் சொல்கிறார்.
“பழைய வாகனத்துக்குப் புதிய சாரதி; அவ்வளவுதான்” என்று ஜே.வி.பி கூறுகிறது.
பிரதமர் ரணில், ஜனாதிபதி மைத்திரி மற்றும் இவர்களது நம்பிக்கைக்குரிய அமைச்சர்கள் என்பவர்கள் தமிழர் பிரச்சனையைக் கையாளும் விதமும், தெரிவிக்கும் கருத்துகளும் உலக்கை மற்றும் புதிய சாரதிக் கதைகளை நிரூபித்து நிற்கின்றன.
இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை மீளளிக்கும் விடயத்தை ஒரு பானையின் ஒரு சோறாகப் பதம் பார்க்கலாம்.
இவைகளை மீளக் கையளிக்க எத்தனை கூட்டங்கள், எத்தனை சந்திப்புகள், எத்தனை உறுதியுரைகள், எத்தனை காலக்கெடுக்களை ஆட்சிக் கதிரையில் இருப்பவர்கள் வழங்கினார்கள்.
சில வாரங்களுக்கு முன்னர் காங்கேசன்துறைக்குப் போன மைத்திரிபால சிறிசேன, ஜூன் மாதத்துக்கு முன்னர் காணிகள் மீளளிப்பு முழுமையடைந்துவிடும் என்று சொன்னார்.
ஆனால் அங்கு அவரால் விடுவிக்கப்பட்ட நடேஸ்வராக் கல்லூரிக்குள் பாடசாலை நிர்வாகம்கூட இன்னமும் அனுமதிக்கப்படவில்லை. பாடசாலைக்குச் சொந்தமான பல ஏக்கர் காணிகளில் இராணுவம் தொடர்ந்திருந்து வேவு பார்க்கின்றது.
இவ்விடயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணசேன ஹெட்டியாராய்ச்சி என்ன சொல்கிறார்?
கொழும்பில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த இவர், வடக்கில் இராணுவப் பாதுகாப்புக்குத் தேவையான காணிகள் உரிமையாளர்களிடம் மீளளிக்கப்பட மாட்டாது என்று அழுத்திக் கூறியுள்ளார்.
இக்காணிகளின் பெறுமதிக்குக் கூடுதலான ந~;டஈடு உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் என்ற உறுதிமொழியையும் இவர் வழங்கியுள்ளார்.
இவர் தெரிவித்த இவ்விடயங்கள் ஒன்றும் புதுமையானவையல்ல. ஆனால் இங்குள்ள கேள்வி என்னவெனில் தமிழரின் காணிகளை மீளளிக்கும் இறுதி முடிவு யாருடைய அதிகாரத்திலுள்ளது என்பதுதான்.
மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த அவரது சகோதரர் கோதபாய எவ்வாறு நடந்து கொண்டாரோ, அதேபாணியில்தான் இன்றைய பாதுகாப்புச் செயலாளரும் நடந்து கொள்கிறாரா?
காணாமல் போனவர்களின் உறவினர்கள் அவர்களுக்கான மரணச் சான்றுகளைப் பெற்றால் உரிய கொடுப்பனவுகளைப் பெற முடியுமென்று சில மாதங்களுக்கு முன்னர் பசப்பு வார்த்தை கூறினார் விசாரணைக் குழுவின் தலைவர் பரணகம.
இப்போது அதேபாணியில், காணிகளின் உரிமையாளர்களுக்கு அதன் பெறுமதியிலும் கூடுதலான பணம் வழங்கப்படுமென்று ஆசை வார்த்தை கூறுகிறார் பாதுகாப்புச் செயலாளர் ஹெட்டியாராய்ச்சி.
இதுபோதாதென்று, வவனியாவில் கொக்குவெளி என்ற தமிழ்க் கிராமத்தை ஷகொக்கெலிய| எனப் பெயர் மாற்றி, நல்லிணக்கக் கிராமமென்று சொல்லி ஐம்பத்தொரு வீடுகளைக் கொண்ட இராணுவக் கிராமமொன்று அமைக்கப்பட்டுள்ளது.
இராணுவத்துடன் இணைந்த தமிழ்ப் பெண்களுக்கும், தமிழ்ப் பெண்களைத் திருமணம் புரிந்த சிங்கள இராணுவத்துக்குமென இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள வடமாகாண சபை, எதிர்ப்புத் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியுள்ளது.
தமிழரின் வாழ்வுரிமைக் காணிகள் இவ்வாறு பறிபோய்க் கொண்டிருப்பதுடன் சிங்கள மயமாக்கப்பட்டும் கொண்டிருக்கையில், இதனைத் தட்டிக் கேட்க வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதுவுமே தெரியாததுபோல் வாய்பொத்தி இருக்கிறது.
ஆனால் கிழக்கிலங்கையில் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், “ஆண்ட இனம் மீண்டும் ஆள நினைப்பதில் தவறென்ன?” என்று பேசியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஷபேச்சுப் பல்லக்கு; தம்பி கால்நடை| என்ற கதைதான் இது.
தமிழ் மண்ணும் பறிபோய் தமிழ் மக்களும் கலப்பினமாக்கப்பட்டபின் எந்த மண்ணை, எப்படி ஆட்சி புரிவது?
இந்தியா எப்போதும் தமிழர் பக்கமே இருக்கும். நியாயமான தீர்வை நிச்சயமாகப் பெற்றுத் தருமென கூட்டமைப்பு கூறி வருவதை நம்பியிருக்கும் தமிழர், கொஞ்சம் கொஞ்சமாக தம் மண்ணின் ஒரு பகுதியை இழந்து வருவதுடன் மறுபகுதி கலப்புமண் ஆக்கப்படுவதையும் தாங்க முடியாது தவிக்கின்றனர்.
இது கூட்டமைப்புக்குப் புரியாததல்ல.
ஆனால், ஷமாமியின் சேலை கழன்ற…| கதைபோல கண்களை மூடி வாய் பொத்திக் கொண்டிருப்பதுதான் இவர்கள் நிலைமை.
அண்மையில் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெ~hப்பைச் சந்தித்த சம்பந்தன், ஒரு முக்கிய வேண்டுகோளை காதோடு காதாக அவரிடம் வைத்துள்ளார்.
“சர்வதேசத்துக்கு இலங்கை அரசு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற, இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்பதே அந்த வேண்டுகோள்.
இதுவரை தாம் நம்பிக்கை கொண்டிருந்த இந்தியாவிடம் இதனைக் கேட்டு வந்த கூட்டமைப்பு, இப்போது அமெரிக்காவின் பக்கம் திரும்பியுள்ளது.
அமெரிக்கத் தூதுவர் பதிலேதும் வழங்காது, கர்மவீரர் காமராஜரின் ஷஆகட்டும் பார்க்கலாம்| பாணியில் அசையாது இருந்துள்ளார்.
இவ்வருட இறுதிக்குள் தமிழருக்கு நியாயமான அரசியல் தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக இந்தியாவை நம்பிக் கூறிவந்த சம்பந்தனிடம், அது மெதுமெதுவாக அருகி வருவதுபோல் தெரிகிறது.
“நாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம்” என்று எப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் போகிறது?
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila