அத்துடன், நெடுந்தீவு, நல்லூர் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தலா 06 காணிகளும் காரைநகரில் 05 காணிகளும், பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 03 காணிகளும் கரவெட்டி, யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா 02 காணிகளும், சண்டிலிப்பாயில் 09 காணிகளும் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் 01 காணியும் தேவை என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மும்படையினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள காணிகள், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்திலும் அளக்க முற்பட்ட போதிலும் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலையீடுகளினால் தடுத்து நிறுத்தப்பட்டன. எனினும் மீண்டும் நில அளவைகள் திணைக்களத்திடம் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையானது மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. |
யாழ்ப்பாணத்தில் 118 இடங்களில் காணிகளைக் கோரும் முப்படைகள்!
Related Post:
Add Comments