அரசாங்கத்தின் தொழில் அபிவிருத்தி முதலீட்டு திட்டத்தின் கீழ் அரச நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்திச் சபையினால் பனிச்சங்கேணி வாவியோரத்தில் உள்ள பகுதி ஒன்று இறால் வளர்ப்பு திட்டத்திற்கு என அடையாளமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் காரணமாக சதுப்பு நிலத் தாவரங்கள் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறும் ஆர்ப்பாட்டகாரர்கள், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தினர். சதுப்பு நிலத் தாவரங்கள் அழிக்கப்படுவதாலும் இறால் பண்ணையிலிருந்து வெளியேறும் கழிவுகளினாலும் வாவி மாசடையும் என்றும், மீன், நண்டு, இறால் ஆகியவற்றின் இனப்பெருக்கம் குறைவடையும் எனவும் அதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். குறித்த திட்டத்திற்கு உள்ளுர் மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ள எதிர்ப்பு குறித்து கவனம் செலுத்தப்படும் என அரசாங்க அதிபரால் பிரதேச செயலாளர் ஊடாக உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், உரிய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்து அந்தத் திட்டத்தை தடுப்பதாக உறுதி வழங்கினார். இதனையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். |
இறால் வளர்ப்புத் திட்டத்துக்கு எதிராக வாகரை மக்கள் ஆர்ப்பாட்டம்!
Related Post:
Add Comments