புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்காக வடமாகாண சபையினால் தயாரிக்கப்பட்டு, சபையில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்வுதிட்ட யோசனை குறித்த விசேட அமர்வு இன்றைய தினம் இடம்பெற்றிருந்த நிலையிலேயே ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்வுத்திட்ட யோசனை குறித்த வடமாகாண சபையின் விசேட அமர்வு ஆரம்பம்!
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்காக வடமாகாண சபையினால் தயாரிக்கப்பட்டு, சபையில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்வுதிட்ட யோசனை குறித்த விசேட அமர்வு தற்போது வடமாகாண சபையில் நடைபெற்று வருகின்றது.
வடமாகாண சபையின் 50வது அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது, சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு தீர்வுதிட்ட யோசனை வரைபு குறித்த விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
வடமாகாண சபையின் 49வது அமர்வு கடந்த 12ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) வடக்கு மாகாணசபையில் நடைபெற்றபோது, அன்றைய தினமே இந்த விவாதம் நடத்தப்படவிருந்தது. எனினும் தீர்வு திட்டம் முழுமைபெறாமமையில் விவாதம் இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேசிய அரசாங்கம் நடைமுறையிலுள்ள அரசியலமைப்பினை மாற்றி ஒரு புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதற்காக சகல மாகாணசபைகளிடமிருந்தும், அரசாங்கம் தீர்வுதிட்ட யோசனைகளை கேட்டிருந்த நிலையில், வடமாகாண சபையும் 19 பேர் கொண்ட ஒரு குழுவினை நியமித்து தீர்வு திட்ட யோசனைகள் தொடர்பில் கருத்துக்களை பெற்று வந்தது. இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட யோசனைகள் அடங்கிய தீர்வுதிட்ட வரைபு கடந்த வாரமளவில் வடமாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் அந்த யோசனை குறித்து ஒரு விசேட அமர்வு நடத்தப்பட்டு விவாதம் நடத்தப்டுகின்றது.