
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்த வருடம் டிசம்பர் மாதத்துடன், 40 வயதை அடையும் 38 ஆயிரம் விதவை பெண்கள் இருப்பதாகவும், இவர்கள் தமக்கான வாழ்கையினையும், வாழ்வாதாரத்தினையும் ஏற்படுத்திக் கொள்வதற்கான உடல்சக்தியை இழந்து வருவதாகவும், இலங்கை இந்து சம்மேளனத் தலைவர் என்.அருண்காந் தெரிவித்தார். அத்துடன், சமூதாயத்தில் என்ன நடைபெறுகின்றது என்பதை கண்டுகொள்ளாமல் கோவில்களுக்கு வர்ணம் பூசி கும்பாபிஷேகம் செய்வதால், தமிழர்களுடைய பிரச்சனையை ஒரு நாளும் தீர்க்கமுடியாது என்றும் சுட்டிக்காட்டினார். காரைத்தீவில் நேற்று (வியாழக்கிழமை) சுவாமி விபுலானந்தரின் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ”மட்டக்களப்பு கிரான் பிரதேசத்திற்கு அண்மையில்கான் விஜயம் செய்தேன். அங்கே விதவைப் பெண்கள் வீட வீடாக சென்று ஆடைத்துவைப்பது, பாத்திரம் கழுவுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு தமது வாழ்கையினை நடத்திச் செல்கின்றனர். நாங்கள் சமூதாய ரீதியான பிரச்சனைகளை கண்டும்காணாமல் தள்ளிப் போய்க் கொண்டிருப்போமானால் மிகவும் ஒரு கேவலமான சமூதாயமாக ஆக்கப்படுவோம். எனவே சமூதாய ரீதியான பார்வை மிகவும் முக்கியமான தேவையாக இருக்கின்றது எனவே நாங்கள் சிங்கம் போலவோ புலியைப் போலவோ, ஆட்டைப்போலவோ இல்லாது தேனீர் கூட்டம்போல இருக்கவேண்டும். இலங்கையில் எந்த சந்தியிலும் இந்துக்களின் சிலை வைப்பதற்கு இதுவரை யாரும் அனுமதி வழங்கவில்லை ஆனால் முதல் முறையாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் பௌத்த சாசன அமைச்சின் அனுமதியுடன் பௌத்த இந்துக்களால் ஒருங்கிணைந்து ஒற்றுமைப்படுத்த பறைசாற்றுகின்ற முதலாவது சிலை திறப்பு விழா இன்று இடம்பெறுவதாகவும் கூறினார்.” என்றும் கூறினார்.