இது தொடர்பினில் வடமாகாணசபை அமர்வினில் பிரேரணையொன்றினையும் சீ.வி.கே.சிவஞானம் கொண்டுவந்திருந்தார்.
அவற்றினை தடைசெய்ய காரணமாக அவதூறு செய்திகள்,சந்ததியினை சீரழிக்க கூடிய வெளியீடுகளை அவை வெளியிடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வடமாகாண முதலமைச்சரின் பதவியை கவிழ்த்து ஆட்சி கதிரையேற வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் சுமந்திரன் ஆதரவு கும்பலான ஆனோல்ட் ,சயந்தன்,சுகிர்தன் மற்றும் அஸ்மின் போன்றோர் முன்னெடுத்ம சதி முயற்சிகள் இணைய ஊடககங்களாலேயே அம்பலப்படுத்தப்பட்டு முறியடிக்கப்பட்டிருந்தது.
அதே போன்று அமைச்சர்கள் முதலமைச்சரினை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்போதாக மிரட்டியதும் இணைய ஊடகங்களாலேயே அம்பலமாகியிருந்தது.இந்நிலையினில் புலம்பெயர் இணைய ஊடககங்களை கடுமையாக விமர்சித்து வரும் இக்கும்பல் இலங்கை அரசினூடாக அவற்றினை தடை செய்ய மீண்டும் முயல்வது அம்பலமாகியிருக்கின்றது.