தேர்தல் காலங்களில் நான் எழுதிய பெரும்பாலான கட்டுரைகளில் இவற்றை பிரதிபலித்திருந்தன. ஆனால் தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் என்ற பேதைத்தனமான வேண்டுகோளை, நான் ஒருபொழுதும் முன் வைக்கவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கு கிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம், மலை நாட்டுத் தமிழர்களது வாக்குகளுடனேயே இன்று பதவிக்கு வந்துள்ளார். சிறிசேன பதவிக்கு வந்ததன் பலனாக, லஞ்சம், பண மோசடிகளில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினரையும், தோழர்களையும் இன்று நீதியின் முன்னால் நிறுத்தபட்டு வருகின்றனர்.
வடக்கு கிழக்கு வாழ் தமிழீழ மக்கள் இலங்கைத் தீவில் ஓர் தேசிய இனம், இதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க முடியாது. ஆனால் அரசியல் பதங்களில் எம்மை எண்ணிக்கையில் குறைவான சிறுபான்மை இனமாக சுட்டிக்காட்டபட்ட பொழுதிலும், இலங்கையின் சுதந்திரத்தின் பின்னர் அன்றும் இன்றும், இத்தீவின் ஆட்சியாளர்களாக யார் இருக்க முடியும் என்பதை பல தடவைகளில் நிர்ணயிக்கும் ஓர் முக்கிய சக்தியாக இருந்து வருகிறோம்.
ஆனால் தெற்கில் இனத்துவேசம் கொண்ட சிங்கள கட்சிகளிற்கும், ராஜபக்ச குடும்பத்தினருக்கும் இது மன வேதனையை கொடுக்கும் ஒரு விடயமாகும்.
இந்த மாபெரும் பலத்தை, சக்தியை, தமிழ் அரசியல் தலைவர்கள் இன்றுவரை எவ்வளவு சதூரியமாக எமது இனத்தின் விடிவுக்காக பயன்படுத்தியுள்ளார்கள் என்ற விடை கிடைக்காதா வினா மறுபுறம் உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச ஓர் வடித்தெடுத்த இனவாதி என்பதனை இங்கு நான் எழுதித்தான் பலர் அறிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதற்கு ஆயிரம் உதாரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.
தெற்கின் அரசியல்வாதிகளில் பெரும்பான்மையானோர் இந்த அடிப்படையிலேயே தமது அரசியலை நடாத்தி வருகிறார்கள். ஆனால் துணிந்து தமிழ் மக்களின் தாயாக பூமியில், விசேடமாக யாழ்ப்பாணத்தில், அரசியல் மேடைகளில் இனத்துவேசத்தை கக்கிய தெற்கின் முதல் அரசியல்வாதி ஆகில் அது முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவாகவே இருக்க முடியும்.
இவற்றை அவருக்கு கூலிக்கு மாரடிக்கும் தமிழ் கையாட்கள் பார்த்து வேடிக்கையாக சிரிப்பதையும் தமிழ் மக்கள் நேரில் கண்டுகொண்டார்கள்.
புதிய ஜனாதிபதி, புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததிலிருந்து, சர்வதேச சமுதாயம் இலங்கைத்தீவில் நடப்பவற்றை மிகவும் உன்னிப்பாக அவதானித்த வண்ணம் உள்ளனர்.
கடந்த ஐ. நா. மனித உரிமை சபை அமர்வில் சமூகமளித்திருந்த, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய வடமாகாண சபை உறுப்பினருமான சிவாஜிலிங்கம், தற்போதைய அரசு, சில ஒப்பனை வேலைகளை மட்டுமே தமிழர்களது தாயக பூமியான வடக்கு கிழக்கில் செய்துள்ளதாக கூறியிருந்தார்.
வடக்கு கிழக்கிலிருந்து எமக்கு கிடைத்துள்ள தகவலுக்கு அமைய, தமிழர்களது தாயக பூமியில் மனித உரிமை மீறல்களான – கைது, தடுப்புக்காவல், காணாமல் போதல், பெண்கள் மீதான பாலியல் வன்முறை, படுகொலைகள் யாவும், முன்னைய ராஜபக்ச அரசு போன்று, மேற்கொள்ளப்படவில்லை என்பது உண்மை.
முன்னைய அரசினால் மேற்கொள்ளப்பட்ட நில அபகரிப்பு, இவ் அரசினால் மேற்கொள்ளப்படவில்லை என்பது உண்மையாக இருந்த பொழுதும், முன்னைய அரசினால் அபகரிக்கப்பட்ட நிலங்களை சரியான முறையில் இவ் அரசு இதுவரையில் உரியவர்களிடம் மீளக் கொடுக்கப்படவில்லை. ஆகையால் தற்போதைய அரசு, ஓர் நல்லாட்சியுடனான ஜனநாயக வழியில் செல்வதற்கு மிக காலம் உள்ளது என்பதே யதார்த்தம்.
ராஜபக்சாக்களின் முதலைக் கண்ணீர்
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற ராஜபக்சவும் அவரது குடும்ப அங்கத்தவர்களும், தோழர்களும் தற்பொழுது நாட்டின் தேசிய பாதுகாப்பில் மிக அக்கறை கொண்டவர்கள் போல் காட்சியளிக்கின்றனர்.
மிக வேடிக்கையான விடயம் என்னவெனில், நாட்டின் சொத்துக்களை சூறையாடியவர்களென கடந்த சில வாரங்களாக விசாரணை, கைது ஆகியவற்றிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளவர்கள்,
தேசிய பாதுகாப்பு பற்றி கதைப்பதற்கு தகுதியுடையவர்களா? தங்கள் மீதான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களிலிருந்து, தம்மை காப்பாற்றி கொள்வதற்கான, பலிஆடு தான், இவர்கள் கூறும் தேசிய பாதுகாப்பு.
ராஜபக்சாக்களை பொறுத்தவரையில், தேசிய பாதுகாப்பு என்பது, வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் தினமும் துன்புறுத்தப்பட வேண்டும; அங்கு வாழும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட வேண்டும். அங்கு பலர் கொலை செய்யப்பட வேண்டும். இதேவேளை சமய ஸ்தலங்களான – பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவலாயங்கள், கோயில்கள், பௌத்த தீவிர வாதிகளினால் தீயிடப்பட்டு அழிக்கப்பட வேண்டும்.
எமக்கு கிடைக்கும் தகவலுக்கு அமைய, தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகளின் அப்பாவி பெற்றோர், உறவினர், நண்பர்கள், பல வருடங்களிற்கு பின்னர், தற்பொழுது தான் ஓர் அளவு, தொல்லைகள் குறைந்து வாழுகின்றனர். முன்னைய அரசு இவர்களிற்கு செய்த தொல்லைகள், அநியாயங்கள் சொல்லில் அடங்காதவை.
ஆனால் ராஜபக்ச குடும்பத்தினர், தங்களது வங்குறோத்து அரசியலில் முன்னேற்றம் காண்பதற்காக, இன்றும் தமிழீழ விடுதலை புலிகளின் பெயரை உச்சரிக்காத நாட்கள் கிடையாது. தெற்கில் உள்ள மக்களின் அனுதாபங்களை பெறுவதற்காகவும், அவர்களது வாக்குகளை பெற்று மீண்டும் அரியாசனம் ஏறுவதே இவர்களது கபட நோக்கம்.
உண்மையை கூறுவதனால், யுத்தம் முடிந்த நாள் முதல், இவர்கள் பதவி இழக்கும் வரை, வடக்கு கிழக்கில் தினமும் அவலக் குரல்களையும், இரத்த களரியையும், அநியாய இறப்புக்களையும் கண்டு அனுபவித்த ராஜபக்சக்களிற்கு, தற்போதைய அரசும் இப்படியான செயல்களை தொடர வேண்டும் என்பது தான் இவர்கள் விருப்பம். இதை தான் இவர்கள் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் கூறுகிறார்கள்.
தற்போதைய அரசில் உள்ள சில அமைச்சர்களும், பெயர் வழிகளும் இவற்றை தொடர்ந்து கடைபிடிக்க கூடிய திறமைசாலிகளாக இருந்த பொழுதிலும், இவ் அரசு சர்வதேசத்தின் கண்கணிப்பின் கீழ் உள்ள காரணத்தினால், இவர்கள் தற்பொழுது பெட்டி பாம்புகளாக காணப்படுகின்றனர்.
இலங்கை தீவு மீதான சர்வதேசத்தின் கண்காணிப்புக்கள் இன்றுள்ளது போல் பல வருடங்களிற்கு முன்பு இருந்திருந்தால், தமிழர்களது தாயக பூமியின் இன்றைய நிலை வேறாக இருந்திருக்கும்.
ராஜபக்ச அரசு, தாம் தமிழ் மக்களை புலிகளிடமிருந்து காப்பாற்றியாதாக கூறிய ஆபாண்டமான பொய்யை, சர்வதேச சமுதாயம் மிகவும் இலகுவாக ஏற்றுக் கொண்டிருந்தது.
உண்மையில் ராஜபக்ச அரசு மக்களை புலிகளிடமிருந்து காப்பாற்றி இருந்திருந்தால், மே 2009ம் ஆண்டு முதல் எதற்காக 200,000 மேற்பட்ட இராணுவத்தினரை, யாழ் குடாநாட்டில் மட்டும் நிறுத்த வேண்டும்? அத்துடன் வடக்கு கிழக்கில் வாழும் பூர்வீக மக்களின் நிலங்களை வன்முறை மூலம் அபகரித்து, அங்கு சிங்கள குடியேற்றம், பௌத்தமயம், இராணுவமயம் போன்றவற்றை மேற் கொண்டனர்? இவை புலிகளிடமிருந்து காப்பாற்றிய மக்களுக்கு செய்யும் பிரதி உபகாரமா? இவையாவும் ராஜபக்ச அரசின் புலுடாக்கள்.
13வது திருத்தச் சட்டமும் இந்தியாவும்
மிகவும் கடுமையாக யுத்தம் நடந்த வேளையில், சர்வதேசத்தின் ஆதரவை, விசேடமாக இந்தியாவின் ஆதரவை பெறுவதற்காக, முன்னாள் ஜனதிபதி ராஜபக்ச, சர்வதேசத்திடம் தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக, 13வது திருத்தச் சட்டத்திற்கு மேலாக, 13வது பிளஸை (13+) கொடுப்பதற்கு தம்மிடம் திட்டம் உள்ளதாக கூறியிருந்தார்.
இதன் மூலம் சர்வதேசத்தின் சகல உதவிகளையும் பெற்று, யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்திருந்தார். யுத்தம் முடிந்து ஏறக்குறைய ஆறு வருடங்கள், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருந்த ராஜபக்ச அரசு, இன பிரச்சனைக்கு எந்த தீர்வும் காண முன்வரவில்லை.
கூறியதற்கு எதிர்மாறாக, தமிழ் மக்களை மிக மோசமான நிலைமைகளுக்கு தள்ளியது மட்டுமல்லாது, சர்வதேசத்தின் கருத்துக்களையும் புறக்கணித்து, நிலப்பறிப்பு, சிங்களமயம், பௌத்தமயம், இராணுவமயம் ஆகியவற்றை பெரும் வெற்றியுடன் நடாத்தி வந்தார்.
ராஜபக்ச தொடர்ந்து இவ்வாறு சர்வதேசம் மீதும், விசேடமாக இந்தியா மீதும் சவாரி செய்த வேளையில், இவரது சர்வதேச பரப்புரையாளர்கள், இந்தியாவை நன்றாக பாவித்து, தமது சர்வதேச பரப்புரை வேலைகளின் வெற்றிகளை பெற்றுக் கொண்டார்கள்.
உதாரணத்திற்கு, ஐ.நா.மனித உரிமை சபையில், யூன் 2009ம் ஆண்டு சிறிலங்காவிற்கு சார்பான மிகைப்படுத்தப்பட்ட ஓர் பிரேரணையை நிறைவேற்றியதுடன், இந்தியாவை தங்களது நெருங்கிய நண்பர்களாக ஆசியா, ஆபிரிக்கா நாடுகளுக்கு காண்பித்து, அவர்களது ஆதரவையும் பெற்றுக்கொண்டார்கள்.
இதே ராஜபக்சவும், அவரது குழுவினரும், இன்று 13வது திருத்தச் சட்டம் பற்றியும், இந்தியா பற்றியும் கூறுவதை சகலரும் படித்திருப்பார்களென நம்புகிறேன். ராஜபக்சவின் பரப்புரை குழுவின் முக்கியஸ்தர்களில் ஒருவர், இந்தியா 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்காவிற்கு அழுத்தம் கொடுக்க முடியாது என்கிறார். இன்னுமொருவர், இந்தியா இனிமேல் சிறிலங்காவில் நாடுநிலைமையாளராக இருக்க முடியாது என கூறுகிறார்.
இவர்கள் இருவர்களின் கூற்றுக்களும் மிக நகைப்பு உரியாது. 13வது திருத்தச் சட்டம் பற்றி இந்தியா வலியுறுத்தாதது வேறு யார் - சீனா, கியூபா, வெனிசூலா போன்றவர்களா வலியுறுத்துவார்கள்?
இப்படியாக சந்தர்ப்பவாத கருத்துக்களை கூறுபவர்கள் நிச்சயம் சரித்திரத்தை மறந்தவர்களாக இருக்க முடியாது. சுருக்மாக கூறுவதனால், இவர்கள் மனதில் இனவாதம் மிக நன்றாக இடம்பிடித்துள்ளது என்பதே உண்மை. இவர்களின் எழுத்துக்களில், பேச்சுக்களில் இவற்றை வெளிப்படுத்தாது மிகவும் கவனமாக கையாளுகிறார்கள்.
இவை யாவற்றையும், இந்தியாவின் முடிவெடுப்பாளர்கள் தமது கவனத்தில் கொள்வார்களென நம்புகிறேன். எனது பார்வையில், சிறிலங்காவின் ஒவ்வொரு அரசும், தமிழர்களது விடயத்தில், இந்தியாவை தமது தேவைக்கு ஏற்ப பாவிக்கிறார்கள் என்பது தான் உண்மை. இவற்றையும் இந்தியாவின் முடிவெடுப்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆய்வுகளும், அறிக்கைகளும்
கடந்த சில தினங்களிற்குள், சில அரசியல் ஆய்வாளர்களும், ரொலோவின் பாராளுமன்ற உறுப்பினர்களும், சில முக்கிய விடயங்களை தமது ஆய்வுகளிலும், அறிக்கைகளிலும் கூறியுள்ளார்கள்.
ஆய்வாளர்களின் கருத்தின் பிரகாரம், எதற்காக இவ் புதிய அரசு - கருணா, பிள்ளையான், இனியபாரதி, டக்ளஸ் ஆகியோர் மீது, அவர்கள் தொடர்புடைய பல கொலைகள், அச்சுறுத்தல்கள், லஞ்சம், ஊழல்கள் விடயத்தில் ஆயிரம் சாட்சிகள் ஆதாரங்கள் இருந்தும், இன்றுவரை எந்த விசாரணையோ, கைதோ மேற்கொள்ளப்படவில்லை?
இதேவேளை, தமிழர் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ரொலோவின் 24 ஏப்ரல் 2015 அறிக்கையின் பிரகாரம், இவ் புதிய அரசு தமிழ் மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தவற்றில் எதையும் அவர்களது நூறு நாட்களில் செய்யவில்லை என கூறியுள்ளது.
கடந்த ஏப்ரல் 18ம் திகதி (சனிக்கிழமை), இரவு 11.00 மணிக்கு பின்னர், பாரிஸில் நிலத்திற்கு கீழால் ஓடும் (சுரங்க பாதை) ரயிலில் என்னை பின் தொடர்ந்த சிறிலங்காவை சேர்ந்த இனம் தெரியாத நபர் ஒருவர், எனக்கு பின்வருமாறு கூறினார்.
பாரிஸில் உள்ள சிறிலங்காவின் தூதுவரலாயம், தன்னிடம் என்னை பற்றிய பொறுப்பை கொடுத்ததாகவும், இதை தான் செய்ய விரும்பாத காரணத்தினால், எனது விடயத்தில் தான் அக்கறை காட்டவில்லையென, எந்தவித தயக்கமுமின்றி என்னிடம் கூறியுள்ளார்.
இச்சம்பவம் வேறு இருவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் முக்கிய வினா என்னவெனில், இவ்வேண்டுகோளை பாரிஸில் உள்ள சிறிலங்காவின் தூதுவரலாயம், ராஜபக்சவின் காலத்தில் முன்வைத்ததா? அல்லது தற்போதை அரசு காலத்தில் முன்வைத்துள்ளதா என்பதே. யாராக இருந்தாலும், இப்படியான எண்ணங்களுடன் என்னை அணுக முன்னர், நான் ஓர் அனாதை அல்ல என்பதை மனதில் கொள்வது நல்லது.
சிறிலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்களான – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி ஆகியோர் மேற்கூறப்பட்ட சகல விடயங்களையும் கவனத்தில் கொள்வார்களென நம்புகிறேன்.
ச. வி. கிருபாகரன்
பிரான்ஸ்
tchrfrance@hotmail.com