
கிளிநொச்சியில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு பூசா தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விஜயகுமார் கேதீஸ்வரன் என்ற இளைஞரின் பெற்றோர் கொழும்பில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யவுள்ளனர்.
கிளிநொச்சி – திருவையாறை சேர்ந்த குறித்த இளைஞர் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் பயங்கரவாத விசாரணைப்பிரிவினரால் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு கொழும்பு – மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் கடந்த 2015 ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி விஜயகுமார் கேதீஸ்வரனுக்கு பிணை வழங்கப்பட்டது.கேதீஸ்வரனுக்கு பிணை வழங்குவதற்கு கையெழுத்திட்ட நண்பர் கடந்த 6 ஆம் திகதியில் இருந்து காணமல்போயுள்ளதாகவும்இ இதனால் பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் கடந்த 10 ஆம் திகதி சந்தேகத்தின்பேரில் கேதீஸ்வரனை மீண்டும் கைதுசெய்யது பூசா தடுப்பு முகாமில் தடுத்துவைத்துள்ளனர்.
தற்போது பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கேதீஸ்வரனிடம் காணாமல்போன இளைஞர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாகவும்இ இதன்போது உடல், உளரீதியான சித்திரவதைகளுக்கு அவர் உள்ளாக்கப்படுவதாகவும் அவரது சகோதரி தெரிவித்தார்.இந்த விடயம் தொடர்பாக கொழும்பில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யவுள்ளதாக கூறினார்.