ஜெனீவா தீர்மானம் மூலம் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் : சம்பந்தன்
இலங்கை தொடர்பான ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, உண்மைகள் கண்டறியப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமும் பரிகாரமும் கிடைக்கவேண்டுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுவரை நடைபெற்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் இருக்கும் வகையில் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதற்கான உத்தரவாதம் வழங்கப்படவேண்டுமென தெரிவித்த அவர், இவை நடைபெற வேண்டுமாயின் நிரந்தரமான, நியாயமான ஓர் அரசியல் தீர்வே வழியென இதன்போது குறிப்பிட்டார். எதிர்வரும் ஜூன் மாதம் 13ஆம் திகதி ஐ.நா மனித உரிமை பேரவையின் 32ஆவது அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில், ஏற்கனவே கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கையில் எந்தளவு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது என ஐ.நா ஆணையாளர் அறிவிக்கவேண்டும். ஆகவே அதற்கு முன்னர் இலங்கையில் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் இதன்போது குறிப்பிட்டார். இதேவேளை, ஜனாதிபதி மைத்திரி மற்றும் ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் தீர்வு கிடைக்குமென தாம் நம்புவதாகவும், அனைவரும் விசுவாசமாக நடந்துகொண்டால் இதனை அடையலாமென்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.
Related Post:
Add Comments