அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நாங்கள் படை முகாம்களுக்குள் சென்றுள்ளோம், உறங்கியும் இருக்கின்றோம், அப்பொழுது எல்லாம் மௌனம் காத்த இவர்கள் தற்போது சம்பந்தன் சென்றதை மட்டும் ஏன் இவ்வாறு பெரிதுபடுத்துகிறார்கள் என எமக்கு தெரியவில்லை.
கடந்த 16ம் திகதி நடந்த இந்த சம்பவத்தை இவ்வளவு தூரத்திற்கு கொண்டுவர வேண்டுமா? 10 நாட்களைக் கடந்த நிலையிலும் இது பற்றிய கருத்துக்கள் தேவையற்ற ஒன்றாகும்.
மேலும், போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு அரசியல் லாபம் தேட முயற்சிப்போறே இது தொடர்பில் தற்போது போலியாக கூச்சலிடுகின்றனர். எனவே இதுதொடர்பில் அலட்டிக்கொள்ள தேவையில்லை’ எனவும் அமைச்சரவையின் இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்போது புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் கைது செய்யப்படுவது தொடர்பில் ஊடகவியலாளர்களினால் எழுப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள அவர், ‘புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் கைது செய்யப்படுகின்றார்கள். புனர்வாழ்வு பெற்றவர்களும் நம் நாட்டுப் பிரஜைகளே.
மேலும் விசாரணைகள் என்பது சகஜமான ஒன்று. தற்போது வடக்கு மற்றும் கிழக்கில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த விடயம் தொடர்பாக விசாரணைகளின் போது சிலருடைய பெயர்கள் வெளிவரத்தான் செய்யும். இது ஒன்றும் பெரிய விடயம் இல்லை’ எனவும் தெரிவித்துள்ளார்.