சுவிற்சர்லாந்து சமஷ்டி ஆட்சி முறையை இலங்கையில் பசைபோட்டு ஒட்டமுடியாது என இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் ஹெயின் வோல்கர் நெடர்குன் தெரிவித்தார்.
இலங்கைக்கும் சுவிற்சர்லாந்துக்குமிடையிலான இராஜதந்திர உறவின் 60ஆம் ஆண்டின் நிறைவுநாள் இன்று கொழும்பிலுள்ள பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், அதிகாரப் பகிர்வால் ஒரு நாடு பிளவுபடுவது, என்ற கருத்துப்படக் கூறுவது தவறானது.
உலகிலே ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் சமஷ்டி ஆட்சி நடைமுறையில் உள்ளது. இங்கு தனி நாடாக அதிகார பகிர்வை உள்வாங்கிய அலகுகளை கருதுவதில்லை எனவும் தெரிவித்தார்.
போரின் பின்னரான இலங்கையின் முன்னேற்றங்கள் வரவேற்கப்படவேண்டிய விடயங்களாகும். ஆனால் கடந்தகால மோதல்களுக்கு தீர்வு காண அவை போதுமானவை அல்ல. அனைத்து மக்களும் ஒன்றிணைந்து வாழக்கூடிய சூழலை உருவாக்கவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.