முல்லைத்தீவு சென்ற சம்பந்தரிடம் பிரச்சினைகளை எடுத்துரைத்த மக்கள்
அத்துமீறிய மீன்பிடி மற்றும் பூர்விக நிலம் இராணுவத்தால் விடுவிக்கப்படாமை குறித்து முல்லைதீவு மக்கள், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தரிடன் எடுத்துரைத்துள்ளனர். இரா.சம்பந்தர் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்து கொள்வதற்காகவும், மீனவர் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காகவும் இன்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்தார். வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவின் கோரிக்கைக்கு அமைய, அங்கு விஜயம் செய்த சம்பந்தர் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலக பிரிவுகளையும் சேர்ந்த மக்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே, பூர்விக நிலம் இராணுவத்தால் விடுவிக்கப்படாமை அத்துமீறிய மீன்பிடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மக்கள் சம்பந்தரிடம் எடுத்துரைத்துள்ளனர்.
Add Comments