கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற, அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் துபாய் வங்கியில் இலங்கையர்கள் பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்தபோதும், அதனை யார் பதுக்கி வைத்துள்ளார்கள் என்ற விபரம் தொடர்பில் கண்டறிய எவ்வித நடவடிக்கையும் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லையென அசாத் சாலி இதன்போது குறிப்பிட்டார். ராஜபக்ஷ குடும்பத்தார் எவ்வளவு கொள்ளையடித்தனர் என்ற விடயத்தை வெளியிடாமல், நாட்டு மக்களை அரசாங்கம் இருளில் வைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்தோடு, மஹிந்தவின் உறவினர் ஒருவர் உக்ரைனின் ஆயுத விவகாரத்தில் தொடர்புபட்டுள்ளபோதும், அவரை கைதுசெய்ய முடியாத நிலை இலங்கை பொலிஸாருக்கு உள்ளதென குறிப்பிட்ட அசாத் சாலி, அரசாங்கம் நினைத்தால் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் அவரை கைதுசெய்யலாமென குறிப்பிட்டார். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த உதவிய மக்களுக்கு, அரசாங்கம் இவை குறித்து விளக்கமளிக்கவேண்டுமென, அசாத் சாலி மேலும் தெரிவித்தார்.