ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணியில் ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, குமரகுருபரன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ், உதயராசா தலைமையிலான ஸ்ரீரெலோ, மகேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் அமைப்பு, சந்திரமோகன் தலைமையிலான ஈழ விடுதலை அமைப்பு, பிரபாகரன் தலைமையிலான ஈழ புரட்சி அமைப்ப, ஊடகவியலாளர் வித்தியாதரன் தலைமையிலான ஜனநாயக போராளிகள் கட்சி, பாபு ஷர்மா குருக்கள் தலைமையிலான சர்வதேச இந்து குருமார் அமைப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சி, சித்தன்டி சில்வா தலைமையிலான ஜனநாயக மறுசீரமைப்பு இயக்கம் ஆகியன உள்வாங்கப்பட்டுள்ளன. இந்த புதிய கூட்டணி அமைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில் இன்று பகல் நடைபெற்றது. இதன்போதே இந்த ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி என்ற பெயரிலான புதிய கூட்டணி அறிவிக்கப்பட்டது. |
ஆனந்தசங்கரி, டக்ளஸ் இணைந்து புதிய கூட்டணி! - 10 கட்சிகள்,அமைப்புகள் இணைந்தன
Related Post:
Add Comments