புலம்பெயர்ந்தவர்கள் அனைவருக்கும் பிரஜாவுரிமை : பிரதமர் தெரிவிப்பு

ranil_parliment

யுத்த சூழ்நிலையால் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் பிரஜாவுரிமை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புலம்பெயர்ந்தவர்கள் அநேகமானோர் இந்நதியாவில் முகாம்களில் தங்கியுள்ளதோடு, முகாம்களுக்கு வெளியிலும் தங்கியுள்ள நிலையில், அவர்கள் நாட்டிற்கு வந்தவுடன் பதிவுகளை மேற்கொள்வதில் எதிர்நோக்கும் சிக்கல் குறித்து, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் தெரிவித்ததோடு, அதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் மேற்குறித்த விடயத்தை தெரிவித்தார்;. பிரதமர் தொடர்ந்து தெரிவிக்கையில்- ”1983ஆம் ஆண்டிற்கு பின்னர், இலங்கையிலிருந்து அகதிகளாக இடம்பெயர்ந்து இந்தியா உட்பட வெளிநாடுகளுக்குச் சென்றவர்களை, மீண்டும் நாட்டிற்கு அழைத்து வந்து குடியேற்றுவதே அரசாங்கத்தின் கொள்கையாகவுள்ளது. அவர்களுக்கான பிரஜாவுரிமையை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இடம்பெயர்ந்தவர்களில் சிலர், வேறு நாடுகளில் பிரஜாவுரிமையை பெற்றுள்ளனர். இவர்கள் இலங்கை பிரஜாவுரிமையைக் கோருகின்றனர். அவ்வாறு இரட்டை பிரஜாவுரிமையைக் கோரும் சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்தியாவில் உள்ள அகதிகளும் இதற்குள் உள்வாங்கப்படுவார்கள். இந்தியாவிலுள்ள அகதிகள் பற்றி நான் தகவல்களைக் கோரியிருந்தேன். அது தொடர்பாக சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலயம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 22 வயதுக்கும் மேற்பட்டவர்களே இதுவரை காலடும் பதிவுசெய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 22 வயதுக்கு குறைந்தவர்களையும் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம் நாடு திரும்புவதற்கு தயாராகவுள்ள அகதிகளுக்கு குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, உள்நாட்டு மற்றும் அலுவல்கள் அமைச்சருக்கு பணிப்புரை விடுக்கின்றேன்” என்றார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila