மனித உரிமை செற்பாட்டாளர்களான லலித், குகன் ஆகியோர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்த கருத்து தொடர்பில் விளக்கமளிப்பதற்காக முன்னாள் ஊடக அமைச்சர் இன்று நீதிமன்றில் ஆஜராகினார்.
இதன்போது நீதிமன்றில் சாட்சியமளித்த கெஹெலிய, பாதுகாப்பு அமைச்சுக் கூறிய கருத்துக்களை தான் கூறியதாகவும், அதைவிட வேறு என்ன தெரிவித்தேன் என்பது தனக்கு ஞாபகம் இல்லை என்றும் கூறினார்.
அதனை தொடர்ந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், வழக்கினை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதிக்கு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சசிதரன் ஒத்திவைத்தார்.
கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து லலித், குகன் ஆகியோர் இனந்தெரியாத கும்பலினால் கடத்திச் செல்லப்பட்டிருந்ததுடன், இன்றுவரையில் அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாதுள்ளது.
மஹிந்த ஆட்சியின் போது, இவர்கள் கடத்திச் செல்லப்பட்டதன் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது லலித், குகன் உயிருடனேயே இருப்பதாக அப்போது ஊடகத்துறை அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ் நீதிமன்றில் ஆஜரானார் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல
மனித உரிமை செற்பாட்டாளர்களான லலித், குகன் ஆகியோர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்த கருத்து தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.
யாழ் நீதவான் நீதிமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) லலித், குகன் கடத்தப்பட்டமைக் குறித்து தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணைள் நடைபெற்ற போதே முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து லலித், குகன் ஆகியோர் இனந்தெரியாத கும்பலினால் கடத்திச் செல்லப்பட்டிருந்ததுடன், இன்று வரையில் அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாதுள்ளது.
மஹிந்த ஆட்சியின் போது, இவர்கள் கடத்திச் செல்லப்பட்டதன் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது லலித், குகன் உயிருடனேயே இருப்பதாக அப்போது ஊடகத்துறை அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த கருத்தானது பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்ததுடன், மனித உரிமை செய்பாட்டாளர்களின் விமர்சனத்திற்கும் உள்ளாகியது.
இவ்வாறான ஒரு நிலையில், லலித் மற்றும் குகன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கில், முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹகலிய ரம்புக்வெலவை சாட்சியாக பதியுமாறு முறைபாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் கோரிக்கை விடுத்தமைக்கு அமைய, சாட்சி வழங்குவதற்காக கெஹலிய ரம்புக்வெல இன்று யாழ். நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.