கேகாலை, அரநாயக்க – கபரகல மலை உச்சியில் இன்று மாலை இந்த மண்சரிவு ஏற்பட்டதுடன், இதனால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் உடனடியாக கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஏற்பட்ட மண்சரிவு தொடர்பில் சம்பவ இடத்திற்கு சென்ற, ஆதவனின் சிறப்புச் செய்தியாளர் அனர்த்தம் குறித்து தொலைபேசி ஊடாக தகவல் வழங்கினார்.
இதன்போது, மணசரிவுடன், கற்பாறைகள் விழுந்துள்ளதாகவும், மக்கள் எச்சரிக்கையாக அங்கிருந்து அகற்பப்பட்டமையினால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறினார்.
கேகாலை, அரநாயக்கவில் மற்றுமொரு மண்சரிவு!
கேகாலை, அரநாயக்கவில் மற்றுமொரு மண்சரிவு இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
கேகாலை, அரநாயக்க – கபரகல மலை உச்சியில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், இதனால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்து இதுவரையில் தகவல்கள் எதுவும் தெரியாத நிலையில், மேலதிக தகவல்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன.
மண்சரிவு ஏற்பட்டமைத் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் குறித்த பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக அங்கிருந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியான போதிலும், உறுதியாக எதனையும் கூறமுடியாதுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரநாயக்கவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 18 பேர் சடலங்களாக மீட்கப்பட்டதுடன், 144 பேர் வரையில் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.