வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதா அல்லது வைத்திருப்பதா என்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகுமென தெரிவித்துள்ள அவர் இந்த இடத்தில் இராணுவம் இருக்கத் தேவையில்லை அவர்களை வைத்திருக்கவும் தேவையில்லை என அடித்து சொல்ல வேண்டியது தமிழ் மக்களினதும் தமிழ்பிரதிநிதிகளினதும் கடமையாகுமெனவும் தெரிவித்துள்ளார்.
இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துக்களும் இல்லை. இதற்காக போராடுவோம். இராணுவத்தை வெளியேற்றுவது அரசாங்கத்தின் கடமையாகும். இதனை செய்யத்தவறினால் இது கூட ஒரு விபரீதமான நிகழ்ச்சியாகவே நடந்து முடியும்’ என்றார்.
எங்களுடைய காணிகளை இராணுவம் அளக்க நினைக்கும் போது, அடாத்தாக பறிக்க நினைக்கும் போது நீங்கள் சமாதனம் பற்றி எமக்கு சொல்கின்றீர்கள். இராணுவம் எங்களுடைய பிள்ளைகளை அடாத்தாக பிடிக்கும் போது நாங்கள் இராணுவத்தோடு இசைந்து செல்ல வேண்டும் என எங்களுக்கு அறிவுரை கூறுகின்றார்கள். இவை எல்லாம் ஆக்கிரமிப்பு சிந்தனை கொண்டவர்கள் எங்கள் மீது திணிக்கும் மறைமுகமான ஆயுதங்களாகும்.
நாங்கள் ஒரு சிறிய அளவிலான தேசிய இனம், எங்களுடைய அளவை சிதைக்க முடியும். இந்த சிதைப்பு நடவடிக்கை எங்களுக்கு தெரியாமலே நடந்து கொண்டிருக்கும். நாங்கள் ஒரு நூலகத்தில் ஒரு புத்தகத்தை நீண்ட காலம் தேடாமல் இருந்தால் எவ்வாறு அந்த புத்தகம் ஒதுங்கி ஒரு மூலையிலிருந்து பழுதடைந்து பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்து போகுமோ அதே போல் தான் நாங்களும் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அளிக்கப்பட்டு கொண்டுள்ளோம்.
இந்த அரிப்புக்கள் தான் வாள்வெட்டு, போதைவஸ்தினூடாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது வெறுமனே பார்வைக்குரிய விடயம் அல்ல ஒவ்வொருவரும் விழிப்படைய வேண்டும். இந்த மாற்றத்தை கொண்டுவர ஒவ்வொரு தமிழனும் தனிமனித ஜனநாய ஆயுதமாக மாற வேண்டும். அது உங்களிடம் இருக்கும் பாரிய கடமையாகுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.