யாழில் பொலிஸாரை தாக்குவதற்கு காத்திருந்த ரவுடிக் கும்பல் கைது


யாழில் பல கொள்ளை மற்றும் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 5பேர் கொண்ட குழு வாள், கம்பிகள் மற்றும் கோடரி என்பவற்றுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.பொலிஸார் மீது வாள்வெட்டினை நடத்த தீர்மானித்திருந்த போதே குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதன்போது, 2 மோட்டார் சைக்கிள்கள், 3 வாள்கள், கைக்கோடரிகள், இரும்புக் கம்பிகள் மற்றம் பொல்லுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற கனிஸ்ட மெய்வல்லுனர் போட்டியில் உயரம் பாய்தலில் இரண்டாமிடம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயிலும் இரத்தினசிங்கம் செந்தூரன் என்பவர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் என குறிப்பிடப்படுகிறது.இதேவேளை, இவரின் வழிநடத்தலின் கீழ், சிறுசிறு குரோதங்களுக்கு பழிவாங்கும் செயற்பாடுகளில் இந்தக் கும்பல் முன்னர் ஈடுபட்டதுடன், காலப்போக்கில் கொள்ளை நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது.இவர்களுடன் மேலும் பல சந்தேகநபர்கள் தொடர்புபட்டுள்ளனர். அதிலும், வெளிநாட்டில் வசிக்கும் சிலர் இவர்களுக்கு பண உதவிகளும் செய்துள்ளனர். இவர்களுக்கு பின்னணியில் யாழ் நகரின் ஒட்டுமொத்த குற்றச் செயல்களின் தலைவன் இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.நாவலர் வீதியிலுள்ள வீடொன்றின் கண்ணாடிகளுக்கு சேதம் விளைவித்தமை, யாழ் பல்கலைக்கழகத்தின் முன் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம், நாயன்மார்க்கட்டு பகுதியிலுள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து அங்கிருந்த இருவர் மீது வாள்வெட்டை மேற்கொண்டமை, மோட்டார் சைக்கிள் திருடிச் சென்றமை, வழிப்பறி கொள்ளை, களவு, சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒருவரை வாளால் வெட்டி மோட்டார் சைக்கிள் பறித்துச் சென்றமை, சுண்டுக்குளி பகுதியில் தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் சொகுசு பஸ்ஸின் கண்ணாடியை உடைத்தமை, ஆனைக்கோட்டை பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடியமை மற்றும் முதலி கோயில் கொக்குவில் பகுதியில் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிளினை கோடாரியால் கொத்தி சேதம் விளைத்தமை ஆகிய குற்றச் செயல்களில் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, இந்தக் கும்பலின் முதல் செயற்பாடாக தட்டாதெருச் சந்தியில் மரக்காலையில் பணியாற்றிய சிறுவன் மீது மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் இருந்துள்ளது. அந்தச் சம்பவம் சிறு முன்குரோதம் காரணமாக நிகழ்த்தப்பட்டுள்ளது.அந்தச் சம்பவத்தை செந்தூரன் என்பவர் மேற்கொண்டிருந்தார். எனினும், இவர் தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது கைது செய்யபட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila