முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக காவி உடையைக் களையவும் தயாராக இருப்பதாக பௌத்த பிக்கு ஒருவர் சூளுரைத்துள்ளார்.பௌத்த வரலாற்றில் தேரபுத்தாய பிக்கு என்பவர் பௌத்தத்திற்கு பெருந் தொண்டாற்றிய மன்னர் ஒருவரின் பாதுகாப்புக் கடமையை முன்னிட்டு காவி உடையைக் களைந்து மன்னரின் பாதுகாப்பு ஊழியராக சேவையாற்றியுள்ளார்.இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் நவீன காலத்தில் பௌத்தத்திற்கு பெருந்தொண்டாற்றியிருப்பதாகவும், அவரது பாதுகாப்பிற்காக காவி உடை களைந்து மஹிந்தவுக்குத் தொண்டாற்றவும் தான் தயாராக இருப்பதாக பிக்கு ஒருவர் தெரிவித்துள்ளார்.அம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய பிக்குமார் சம்மேளனம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது சூரியவெவ, பெந்திவெவ பிரேமசிரி தேரர் என்பவரே இதனைத் தெரிவித்துள்ளார்.அத்துடன் தான் மட்டுமன்றி மஹிந்தவின் பாதுகாப்புக்காக சுமார் நூறு பிக்குமார் காவி உடை களையத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மஹிந்தவுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக காவி உடையைக் களையவும் தயார்! புத்தபிக்கு ஒருவரின் சபதம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக காவி உடையைக் களையவும் தயாராக இருப்பதாக பௌத்த பிக்கு ஒருவர் சூளுரைத்துள்ளார்.பௌத்த வரலாற்றில் தேரபுத்தாய பிக்கு என்பவர் பௌத்தத்திற்கு பெருந் தொண்டாற்றிய மன்னர் ஒருவரின் பாதுகாப்புக் கடமையை முன்னிட்டு காவி உடையைக் களைந்து மன்னரின் பாதுகாப்பு ஊழியராக சேவையாற்றியுள்ளார்.இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் நவீன காலத்தில் பௌத்தத்திற்கு பெருந்தொண்டாற்றியிருப்பதாகவும், அவரது பாதுகாப்பிற்காக காவி உடை களைந்து மஹிந்தவுக்குத் தொண்டாற்றவும் தான் தயாராக இருப்பதாக பிக்கு ஒருவர் தெரிவித்துள்ளார்.அம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய பிக்குமார் சம்மேளனம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது சூரியவெவ, பெந்திவெவ பிரேமசிரி தேரர் என்பவரே இதனைத் தெரிவித்துள்ளார்.அத்துடன் தான் மட்டுமன்றி மஹிந்தவின் பாதுகாப்புக்காக சுமார் நூறு பிக்குமார் காவி உடை களையத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related Post:
Add Comments