வட மாகாண சபை செய்ய வேண்டிய வேலையை ஆளுநர் செய்யக் கூடாது: விந்தன்
Posted by : srifm on Flash News On 00:36:00
வட மாகாண சபை முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் செய்ய வேண்டிய வேலையை ஆளுநர் செய்யக்கூடாது. மாகாண சபைக்குரிய விடயங்களில் தலையிட மாட்டேன் என ஆளுநர் குறிப்பிட்ட போதும், அதற்கு மாறாக நடந்து கொண்டுள்ளார் என வட மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் விந்தன் கனகரட்னம் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வட மாகாண சபையின் மாதாந்த அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து பேசிய விந்தன், மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு அந்த மாகாண முதலமைச்சருக்கு உண்டு. ஆனால் வடக்கு மாகாணத்தில் முதலமைச்சருக்கு அந்த பொறுப்பை கொடுக்காது பாதுகாப்பு அமைச்சும் இலங்கை அரசாங்கமும் முட்டுக்கட்டை போடுகின்றது. அந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கு மீறப்படுவதை கட்டுப்படுத்த வடமாகாண ஆளுநர் கூட்டம் கூட்டினார். அது முதலமைச்சரின் அனுமதியின்றி அவரின் அதிகாரத்தில் தலையிடும் கூட்டம் என நான் அதற்கு செல்லவில்லை. அதேபோன்றே யாழ்.நகர அபிவிருத்தி தொடர்பான கூட்டத்திற்கு உள்ளூராட்சி அமைச்சர் எனும் ரீதியில் முதலமைச்சரின் தலைமையிலையே கூட்டம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் அவரின் அனுமதி இன்றி அந்த கூட்டம் கூட்டப்பட்டது. எனவே, அந்த கூட்டத்திற்கு நான் செல்லவில்லை என அந்த பத்திரிக்கைக்கு நான் தெரிவித்தேன். என்னை போல வேறு உறுப்பினர்களும் தெரிவித்து இருக்கலாம். அதேநேரம், அந்த கூட்டத்திற்கு உறுப்பினர்கள் சமூகம் அளிக்கவில்லை என யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள் அனைத்திலும் செய்தி வெளிவந்து இருந்தது. ஆனால் உறுப்பினர் எதற்காக குறித்த ஒரு பத்திரிக்கையை மாத்திரம் குற்றம் சொல்கின்றார் என தெரியவில்லை- என தெரிவித்தார்.
Related Post:
Add Comments