மட்டக்களப்பில் நடைபெற்றுவருகின்ற சிங்கள குடியேற்றங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இப்போது மிகத்தீவிரமாக சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. அந்தவகையில் திட்டமிட்ட வகையில் வாகரைப்பிரதேச செயலாளர் பிரிவில் 178 சிங்கள குடும்பங்கள் முன்பு இருந்ததாக கூறப்பட்டு அவர்களுக்கான காணிகள் வழங்கப்படவேண்டுமென ஆளுனரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் ஆளுனர் அவர்கள் வாகரை பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோரை அழைத்து தனது ஆளுனர் அலுவலகத்தில் ஒன்றுகூடல் ஒன்றை நடத்தி அதில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் புனானை கிழக்கு பகுதியில் சிங்கள மக்கள் முன்பு வாழ்ந்ததாகவும் அவர்கள் யுத்தகாலங்களில் இடம்பெயர்ந்திருந்ததாக கூறி அவர்கள் குடியேற்றப்படவேண்டுமென கூறியுள்ளார்.
இதிலே 178 சிங்கள குடும்பங்களை குடியேற்றப்பட வேண்டுமேன கூறப்பட்டுள்ளது. ஆனால் 178 சிங்கள குடும்பங்கள் எப்போதுமே அங்கு இருந்ததில்லை என்பதனை நான் உறுதிப்படுத்துகின்றேன்.
நான் வாகரைப் பிரதேசத்திற்கு அண்மையில் உள்ள வாழைச்சேனையில் இருந்தவன் என்றவகையில் எனக்கும் வாகரை பிரதேசத்திற்கும் இடையில் நீண்டகால தொடர்பு இருந்துவந்தது என்ற வகையில் அங்கு 178 சிங்களக் குடும்பங்கள் இருந்ததேயில்லை.
புனானையில் மட்டும் 05 சிங்கள குடும்பங்கள் இருந்தது ஆனால் அதற்கு பதிலாக இன்று 29 சிங்கள குடும்பங்களை அங்கு குடியேற்றியுள்ளார்கள். அது கூட மகாதவறு அங்கு 05 குடும்பங்களுக்கு மேல் குடியேற்றியிருக்க கூடாது ஆனால் அதுவும் திட்டமிட்டு அந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் சிங்களத்தில் உறுதி எப்படி வந்தது?நல்லாட்சியின் பின் அங்கு 178 சிங்கள குடும்பங்கள் எப்படி வந்தது 178 குடும்பங்கள் அங்கு இருந்து யுத்தகாலத்தில் வெளியேறியிருந்தால் அவர்கள் இருந்தகாலத்தில் அவர்களது பெயர்கள் வாக்காளர் இடாப்பில் பதியப்பட்டிருக்க வேண்டும் வாக்காளர் இடாப்பில் அந்த குடும்பங்களின் பெயர்கள் இருந்திருக்க வேண்டும்.
178 குடும்பமாக இருந்தால் அது ஒரு கிராமமாக இருந்திருக்கவேண்டும் கிராமமாக இருந்தால் அதற்கு ஒரு பெயர் இருந்திருக்கவேண்டும் அல்லது அந்த 178 குடும்பங்களும் விவசாயம்தான் செய்தார்கள் என்றால் அவர்கள் விவசாய செய்கையில் ஈடுபட்டதற்கான பி.எல்.ஆர். இருந்திருக்கவேண்டு இது எதுவுமே இல்லை.
ஆனால் திடீரேன நீண்ட நாட்களுக்கு பின் இன்று சிங்களத்தில் காணி அனுமதிப்பத்திரங்கள் வந்திருக்கின்றது எவ்வாறு சிங்களத்தில் காணி அனுமதிப்பத்திரங்கள் வரமுடியும் மட்டக்களப்பு கச்சேரியிலே எக்காலத்திலும் சிங்களத்தில் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதில்லை அப்படி இருக்கின்ற போது இவர்களுக்கு எப்படி சிங்களத்தில் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருக்க முடியும்?
ஆகவே இதன் பின்னனியில் திட்டமிட்டு யாரோ செயற்பட்டிருக்கின்றார்கள். திட்டமிட்டவகையில் யாரோ சதிமுயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். ஆகவே 178 குடும்பங்களுக்கும் எக்காரணம் கொண்டும் காணி வழங்க முடியாதுவாகரை பிரதேச செயலாளரோஅரசாங்க அதிபரோ இதற்கு துணைபோவார்களாக இருந்தால் நாங்கள் வீதிக்கு இறங்கி போராடவேண்டி வரும் என்பதை எச்சரிக்கையாக கூறுகின்றேன் என்றார்.