
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் காணாமல் போதல் என்பன தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்கு இராணுவம் ஒத்துழைப்பு வழங்குவதில்லையென சில ஊடகங்கள் கொண்டு செல்லும் பிரச்சாரம் பொய்யானது என இராணுவம் விசேட ஊடக அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் காணாமல் போதல் என்பன தொடர்பில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சகல விசாரணை அறிக்கைகளும் காணாமல் போயுள்ளன.
இதனை தேடுவதற்காக இராணுவத் தளபதியின் உத்தரவின் பேரில் இராணுவ பொலிஸினால் விசாரணை நீதிமன்றங்கள் 2 அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடக அறிக்கையில் இராணுவம் மேலும் அறிவித்துள்ளது.
ஊடக அறிக்கையொன்றை விடுப்பதன் மூலம், இராணுவத் தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது.