ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெறவிருந்த இந்தப் பிரேரணை மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு , ஒலி வாங்கிக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், குறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பும் இன்று நடைபெற்றது.
இதன்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் எழுந்து சென்றுள்ளனர்.
எனினும் குறித்த பிரேரணைக்கு எதிராக 145 வாக்குகளும், ஆதரவாக 51 வாக்குகளும் கிடைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.