அபிவிருத்தியின் உண்மையான அனுகூலத்தை பெற வேண்டுமானால், சகல சமூகங்களுக்கு இடையிலும் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பேருவளையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாட்டில் வாழும் சகல மக்களுக்கு இடையே சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்றும், இவ்வாறு நல்லிணக்கம் ஏற்படாமல் எவ்வாறான அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்தாலும் அது பயனற்று போகும் என்றும் கூறினார்.
இவ்வாறான சூழலில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி, எதிர்வரும் சில தினங்களில் அரசாங்கத்தினால் தெளிவான பொருளாதாரம் திட்டம் ஒன்று முன்வைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த பொருளாதார திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் போது, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்தப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.