ஐநா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு சிறீலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து இலங்கைய ர்களினதும் ஆக்கபூர்வமான பங்களிப்புத் தேவையென ஐநாவின் மனித உரிமைகள் ஆணையாளர் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகிய ஐநாவின் 32ஆவது கூட்டத்தொடரினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இடைமாறுகால நீதி தொடர்பாக 30-1 தீர்மானத்தை நிறைவேற்றும் தமது கடப்பாட்டை சிறீலங்கா அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு விரிவான மூலோபாயம் தேவை.
ஒருங்கிணைந்த வரிசைமுறைப்படி பல்வேறு செயன்முறைகளைக் கொண்டதாக அது அமையவேண்டும். அத்துடன் எல்லா அரசாங்கங்களுக்கும் அனைத்துலக மனித உரிமை சட்டங்களுக்கு முழுமையான மதிப்பை அளிக்குமாறும், ஐ.நா மனித உரிமைகள் பொறிமுறைகளின் பரிந்துரைகளையும், தமது பணியகத்தின் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டுமெனவும் வலியுறுத்தியுமுள்ளார்.