
யுத்தத்தில் சிக்கி பொதுமக்கள் பலியாவது தவிர்க்கமுடியாதது எனவும், இது உலகம் முழுவதும் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.
இறுதிக்கட்டப் போரின்போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டது மாத்திரமன்றி அன்று நடத்தப்பட்ட கனரக ஆயுதங்களின் வடுக்களால் வன்னியில் சிக்கியிருந்த தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர் சிவநேசன் தெரிவித்தார். இவை தொடர்பில் அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது என்றும் அவர் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் ரணில்விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.